தென்னிந்திய சினிமாவின் ஒப்பற்ற குணசித்திர நடிகரான சமுத்திரக்கனி கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் 'ராஜா கிளி' எனும் திரைப்படத்தில் இடம் பெற்ற 'ஆண்டவனே ஆண்டவனே..' எனத் தொடங்கும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.
அறிமுக இயக்குநர் உமாபதி இராமையா இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'ராஜா கிளி' எனும் திரைப்படத்தில் சமுத்திரக்கனி, தம்பி ராமையா, ஸ்வேதா, மியா ஸ்ரீ சௌமியா, எம்.எஸ். பாஸ்கர், மறைந்த நடிகர் டேனியல் பாலாஜி, பழ. கருப்பையா, இளவரசு, 'ஆடுகளம்' நரேன், தீபா ஷங்கர், கிரிஷ், அருள் தாஸ், ஐஸ்வர்யா பாஸ்கரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
எஸ் கோபிநாத் மற்றும் கேதர்நாத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு நடிகரும், இயக்குநருமான தம்பி ராமையா இசையமைத்திருக்கிறார்.
இந்தத் திரைப்படத்தை வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரித்திருக்கிறார்.
எதிர்வரும் டிசம்பர் மாதம் 13 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற 'ஆண்டவனே ஆண்டவனே ஆள்பவன் நீ இல்லையா..' எனத் தொடங்கும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்தப் பாடலை பாடலாசிரியர் தம்பி ராமையா எழுத பின்னணி பாடகர் அனந்து பாடி இருக்கிறார். வாழ்க்கையைப் பற்றிய தத்துவமும், சோகமும் கொண்ட இந்தப் பாடல் அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்திருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM