கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய 9 பேர் கைது !

30 Nov, 2024 | 12:47 PM
image

மாத்தளை, லக்கலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் கடந்த 10 ஆம் திகதி இடம்பெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பில் 09 பேர் நேற்று வெள்ளிக்கிழமை  (29) கைது செய்யப்பட்டுள்ளதாக லக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவந்துள்ளதாவது, 

மாத்தளை, லக்கலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் கடந்த 10 ஆம் திகதி சந்தேக  நபர்கள் சிலர் துப்பாக்கிகளை காண்பித்து மிரட்டி 06 கோடி ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான தங்க நகைகள், மாணிக்கக் கற்கள் மற்றும் பணம் ஆகியவற்றை கொள்ளையிட்டு தப்பிச் சென்றிருந்தனர்.

இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சந்தேக நபர்கள் மாவத்தகம மற்றும் பொல்பித்திகம ஆகிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் வைத்து நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் வத்தேகம, சபுகஸ்கந்த, பொல்பித்திகம, குருணாகல், இரத்தினபுரி மற்றும் வில்கமுவ ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 38 முதல் 49 வயதுக்குட்பட்டவர்கள் ஆவார். 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து தங்க நகைகள், துப்பாக்கிகள், கத்தி மற்றும் வேன் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளனர.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை  லக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வடக்கு, கிழக்கில் அதிக மழைக்கான வாய்ப்பு...

2024-12-11 06:58:02
news-image

அடுத்த வருடம் கடுமையான மருந்து தட்டுப்பாடு...

2024-12-10 18:38:50
news-image

ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின் போதான இராஜதந்திர...

2024-12-10 18:42:50
news-image

ரணில் அரசாங்கத்தின் சகாக்களின் மதுபானசாலைகளிலிருந்து 7...

2024-12-10 18:41:56
news-image

சுதந்திர வர்த்தக வலய ஊழியர்கள், விசேட...

2024-12-10 18:33:17
news-image

அரசாங்கம் தம்மீதான நம்பிக்கையைக் கட்டியெழுப்ப வேண்டும்...

2024-12-10 17:11:35
news-image

அர்ச்சுனா இராமநாதன் எம்.பி. தொடர்பில் நீதிமன்றுக்கு...

2024-12-10 18:31:30
news-image

'அரகலய' போராட்டத்தின் பின்னரான மக்களின் புரிதல்...

2024-12-10 17:26:59
news-image

அரிசி தட்டுப்பாட்டுக்கு உடன் தீர்வுகாண வேண்டிய...

2024-12-10 18:36:51
news-image

வர்த்தமானிக்கு அமையவே அரிசி உற்பத்தியாளர்கள் விற்பனை...

2024-12-10 17:13:00
news-image

மின் கட்டணத்தை 33 சதவீதத்தால் குறைக்க...

2024-12-10 18:28:09
news-image

விவசாயம், குரங்கு உள்ளிட்ட விலங்குகளைப் பாதுகாக்க...

2024-12-10 15:37:41