நிந்தவூர் பிரதேச அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!

30 Nov, 2024 | 01:55 PM
image

சீரற்ற வானிலையால் ஏற்பட்ட திடீர் அனர்த்த நிலைமைகள் குறித்து ஆராய்வதற்காக நேற்று வெள்ளிக்கிழமை (29) நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி அப்துல் லதீப்  ஏற்பாட்டில் கலந்துரையாடல் கூட்டமொன்று நடைபெற்றது. 

இந்நிகழ்வில் திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினர்களான அஷ்ரப் தாஹிர், ஏ. ஆதம்பாவா, எம்.எஸ். உதுமா லெவ்வை மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதி பனிப்பாளர் றியாஸ், பிரதேச சபை செயலாளர், சுகாதார வைத்திய அதிகாரி, பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, கிராம சேவை உத்தியோகத்தர்கள், அபவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது, நிந்தவூர் பிரதேசத்தில் ஏற்பட்ட அனர்த்தங்கள் குறித்து கிராம சேவையாளர்களிடம் கேட்டறியப்பட்டது.

மேலும், குடியிருப்பு காணிகளை விடவும் வீதிகள் உயரமாக அமைக்கப்பட்டிருப்பதே வெள்ள நீர் வழிந்தோடாமைக்கு காரணம் என இக்கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது. 

அதேபோல வடிகான் துப்புரவுப் பணிகள் முழுமையடையாமையும் நீர் வழிந்தோடாமைக்கான காரணங்களுள் ஒன்றாக அடையாளப்படுத்தப்பட்டது.

இனிவரும் காலங்களில் அனர்த்தத்தின் போதான முன்னாயத்த திட்டங்கள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

விவசாயிகளின் வயல்கள் அழிவடைந்தமை, மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டமை குறித்தும் அவற்றுக்கான நஷ்ட ஈடுகளை வழங்குவது தொடர்பிலும் பேசப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் இதன்போது கூறுகையில், 

நாட்டின் பொருளாதார மேம்பாடுகளை பொறுத்தே இந்த அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டங்கள் அமையும். 

கடந்த கால ஆட்சியாளர்கள் மீது மக்கள் கொண்ட வெறுப்பின் காரணமாக மாற்றம் வேண்டியே இந்த அரசாங்கத்துக்கு அதிகமான வாக்குகளை மக்கள் வழங்கியிருக்கின்றார்கள்.

மேலும், இந்த ஆட்சியில் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒற்றுமையுடன் செயற்படுவதை அறிய முடிகிறது. 

அதேபோல, அரச அதிகாரிகளும் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்கி சிக்கனமான முறையில் செயற்றிட்டங்களை முன்னெடுப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கினாலே ஊழலற்ற ஆட்சியினை முன்னெடுக்க முடியும் என்றார். 

இதன்போது தனது வேண்டுகோளை ஏற்று, நிந்தவூர் பிரதான வீதியில் உள்ள ஆலிம் விழுந்த பாலம் வெள்ள நீரினால் பாதிப்புக்குள்ளாகி முற்றாக சேதமடைந்து போக்குவரத்து தடைப்பட்டிருந்ததையடுத்து, விரைவாக செயற்பட்ட வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைமை பொறியியலாளர் அலியாருக்கும் தடைப்பட்டிருந்த நிந்தவூர் பிரதேசத்துக்கான குடிநீர் விநியோகம் தற்காலிகமாக ஒலுவில் பிரதேச இணைப்பிலிருந்து விநியோகிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்ட அக்கறைப்பற்று பிராந்திய நீர்வழங்கல் அதிகார சபையின் பிராந்திய பொறியியலாளர் ஹைதர் அலிக்கும் விரைவாக செயற்பட்ட ஊழியர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் சபை முன்னிலையில் நன்றி தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-02-14 06:08:27
news-image

ஐ.தே.க.வுடனான பேச்சுவார்த்தை தொடர்பில் சஜித் நேர்மறையான...

2025-02-14 01:57:12
news-image

உள்ளுராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் ஐக்கிய மக்கள்...

2025-02-14 01:53:03
news-image

இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிடும் ஜூலி...

2025-02-14 01:48:10
news-image

மஹிந்தவின் உத்தியோகபூர்வ இல்லத்தின் பாதுகாப்பு உத்தியோகஸ்த்தர்கள்...

2025-02-14 01:40:11
news-image

வெளிப்படைத்தன்மையுடன் அனைவருக்கும் சமமான வரி கொள்கை...

2025-02-14 01:26:50
news-image

எல்ல மலைத்தொடரில் ஏற்பட்ட தீ; மலைத்தொடர்...

2025-02-14 00:34:25
news-image

யு.எஸ்.எய்ட் நிறுவனத்தில் நிதி பெற்றதாக குற்றச்சாட்டு...

2025-02-13 17:39:13
news-image

சட்ட மா அதிபரை பதவி நீக்குவதற்கான...

2025-02-13 14:05:04
news-image

காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தின் பின்னணியில் யார்?...

2025-02-13 15:25:56
news-image

இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா,...

2025-02-13 21:48:10
news-image

வட மாகாண ஆளுநருக்கும் இலங்கை ஆசிரியர்...

2025-02-13 21:37:21