2007 ஆம் ஆண்டில் தமிழில்வெளியான கமல்ஹாசனின் ‘தசாவதாரம் ’என்ற படத்தில் நடித்திருந்தார் மூத்த நடிகை ஜெயபிரதா. அதன்பிறகு எந்த படத்திலும் நடிக்கவில்லை. 

தற்போது ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாகும் ‘கிணறு ’ என்ற  படத்தில் ஒருமுக்கியமான கேரக்டரில் நடிக்கிறார். இதனை எம் ஏ நிஷாத் என்பவர் இயக்கி வருகிறார். இதற்கான படப்பிடிப்பு தற்போது கேரளாவில் நடைபெற்று வருகிறது. ஐம்பத்தியைந்து வயதானாலும் இன்றும் படபிடிப்பு சுறுசுறுப்பாக பணியாற்றிவருவதை திரைக்கலைஞர்கள் வியப்புடன் பாராட்டுகிறார்கள்.

தகவல் : சென்னை அலுவலகம்