இளம் ஊடகவியலாளர்களின் பட்டமளிப்பு விழா 2024

Published By: Vishnu

30 Nov, 2024 | 06:39 AM
image

இலங்கை ஊடகவியல் கல்லூரியானது 2004 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது, இலங்கை ஊடகவியல் கல்லூரியின் 2024 இற்கான பட்டமளிப்பு விழா கடந்த புதன்கிழமை, நவம்பர் 27 ஆம் திகதியன்று பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் (BMICH) ஆர்கிட் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் டிப்ளோமா மற்றும் சான்றிதழ் கல்வி திட்டத்தின் கீழ் பட்டதாரிகள் பட்டம் பெற்றனர்.

இலங்கை ஊடகவியல் கல்லூரியின் துணைத் தலைவர் ஹனா இப்ராஹிம் அவர்கள் ஆரம்ப உரையினை வழங்கி, பட்டதாரிகள் மற்றும் விருந்தினர்களை அன்புடன் வரவேற்றார். ஊடகவியல் மற்றும் ஊடகக் கல்வியின் பிரபலமான கல்வியாளரும், இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவருமான கலாநிதி செனேஷ் பண்டார திசாநாயக்க கௌரவ விருந்தினராக பங்கேற்று, ஊடகப் பொறுப்பை மேம்படுத்துவதிலும், பொதுமக்களின் கருத்துக்களை வடிவமைப்பதில் ஊடகங்களின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தி தனது உத்வேகமான தலைமை உரையை நிகழ்த்தினார்.

தலைமை உரையின் பின்னர், ஊடகத்துறையில் டிப்ளோமா பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மேலும், ஜனுஷிகா சிவராஜன் மற்றும் மினாசா ஹசான் ஆகியோர் சிறந்த மாணவர்களாக விருது வழங்கி பாராட்டப்பட்டனர். செய்தி வாசிப்பு மற்றும் நிகழ்ச்சி தொகுத்து வழங்களில் சிறந்த செயல்பாட்டுக்கான விருதை க்நே அஜா ஜோஹர் பெற்றார்.

முன்னணி செய்திப் பிரிவுகளின் செய்தி ஆசிரியர்கள், இராஜதந்திர பணிகளின் பிரதிநிதிகள் மற்றும் இலங்கை ஊடகவியல் கல்லூரி மற்றும் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் உட்பட பலர் விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

இலங்கை பத்திரிகை வெளியீட்டாளர் சங்கம், இலங்கை பத்திரிகையாசிரியர் சங்கம், சுதந்திர ஊடக இயக்கம் மற்றும் இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர்கள் சங்கம் ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் கீழ் இலங்கை ஊடகவியல் கல்லூரி இயங்குகிறது. இது ஊடகக் கல்வி மற்றும் பயிற்சிக்கான நாட்டின் முதன்மையான கல்லூரியாக திகழ்கின்றது.

2022/2023 கல்வி ஆண்டுக்கான ஊடகவியல் டிப்ளோமா வகுப்பின் குழு புகைப்படம்

முன் வரிசை (இருக்கைகள் : இடமிருந்து வலம்):

புத்தினி வீரசூரியா – பாடநெறி ஒருங்கிணைப்பாளர், இலங்கை ஊடகவியல் கல்லூரி (SLCJ)

ஜெயசிரி ஜெயசேகர – விரிவுரையாளர், SLCJ

T. M. G. சந்திரசேகர – விரிவுரையாளர், SLCJ

ககனி வீரகோன் – விரிவுரையாளர், SLCJ

ஹனா இப்ராஹிம் – துணை தலைவர், பணிப்பாளர் சபை, SLCJ

டாக்டர். செனேஷ் பண்டாரா திசாநாயக்க – கௌரவ விருந்தினர்

குமார் லோபேஸ் – பிரதான நிறைவேற்று அதிகாரி, இலங்கை பத்திரிகை ஸ்தாபமானம் (SLPI)

பி. பாலசிங்கம் – விரிவுரையாளர், SLCJ

மோகன்லால் பியதாச – பத்திரிகையாசிரியர், தேசய பத்திரிகை, SLPI மற்றும் PCCSL பணிப்பாளர் சபை உறுப்பினர்

ஆனந்த தர்மபிரிய ஜெயசேகர – SLCJ கல்வி குழு உறுப்பினர்

கசுன் குமாரகே – SLCJ கல்வி குழு உறுப்பினர்

2020/2021 கல்வி ஆண்டுக்கான ஊடகவியல் டிப்ளோமா வகுப்பின் குழு புகைப்படம்

முன் வரிசை (இருக்கைகள் : இடமிருந்து வலம்):

புத்தினி வீரசூரியா – பாடநெறி ஒருங்கிணைப்பாளர், இலங்கை ஊடகவியல் கல்லூரி (SLCJ)

ஜெயசிரி ஜெயசேகர – விரிவுரையாளர், SLCJ

T. M. G. சந்திரசேகர – விரிவுரையாளர், SLCJ

ககனி வீரகோன் – விரிவுரையாளர், SLCJ

ஹனா இப்ராஹிம் – துணை தலைவர், பணிப்பாளர் சபை, SLCJ

டாக்டர். செனேஷ் பண்டாரா திசாநாயக்க – கௌரவ விருந்தினர்

குமார் லோபேஸ் – பிரதான நிறைவேற்று அதிகாரி, இலங்கை பத்திரிகை ஸ்தாபமானம் (SLPI)

பி. பாலசிங்கம் – விரிவுரையாளர், SLCJ

மோகன்லால் பியதாச – பத்திரிகையாசிரியர், தேசய பத்திரிகை, SLPI மற்றும் PCCSL பணிப்பாளர் சபை உறுப்பினர்

ஆனந்த தர்மபிரிய ஜெயசேகர – SLCJ கல்வி குழு உறுப்பினர்

கசுன் குமாரகே – SLCJ கல்வி குழு உறுப்பினர்

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவர், கலாநிதி. செனேஷ் பண்டார திசாநாயக்க , இலங்கை ஊடகவியல் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் 2024, புதன்கிழமை நவம்பர் 27 அன்று, BMICH இல் தலைமை உரை வழங்கிய போது.

இலங்கை ஊடகவியல் கல்லூரியின் துணைத் தலைவர், ஹனா இப்ராஹிம் அவர்கள், இலங்கை ஊடகவியல் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் வரவேற்பு உரையை வழங்கிய போது.

.

மினாசா ஹசான் சிறந்த மாணவியாக (2022/2023) இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவர் கலாநிதி செனேஷ் பண்டார திசாநாயக்கவிடம் விருது பெற்ற போது.

ஜனுஷிகா சிவராஜன் சிறந்த மாணவியாக (2020/2021) ) இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவர் கலாநிதி செனேஷ் பண்டார திசாநாயக்கவிடம் விருது பெற்ற போது.

க்நே அஜா ஜோஹர் செய்தி வாசிப்பு மற்றும் நிகழ்ச்சி தொகுத்து வழங்களில் சிறந்த மாணவியாக இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவர் கலாநிதி செனேஷ் பண்டார திசாநாயக்கவிடம் விருது பெற்ற போது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலகத் தமிழ் வம்சாவளி மாநாட்டுக்கு மலேசிய...

2024-12-08 16:54:59
news-image

புளியம்பொக்கணை கிராம மக்களுக்கு சைவ மங்கையர்...

2024-12-07 19:18:51
news-image

கொழும்புத் தமிழ்ச் சங்கம் நடத்தும் “தமிழர்...

2024-12-07 01:31:17
news-image

கவிஞர் க.பே.முத்தையாவின் நினைவுப் பேருரையும் “தமிழ்...

2024-12-06 17:38:54
news-image

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான நாடகப் போட்டி...

2024-12-06 13:37:29
news-image

ஒரே மேடையில் ஐந்து மாணவிகளின் பரத...

2024-12-06 09:30:52
news-image

இலங்கையில் சீன உணவு திருவிழா

2024-12-06 06:59:44
news-image

இலங்கை சோனக பெண்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில்...

2024-12-05 18:09:25
news-image

ஆங்கில அணுகல் புலமைப்பரிசில் நிகழ்ச்சித்திட்டத்தின் 20ஆவது...

2024-12-05 18:01:16
news-image

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரின் 145வது நினைவு தினம்...

2024-12-05 13:45:23
news-image

ஐடிஎம் நேஷன்ஸ் கேம்பஸ் இன்டர்நேஷனில் 750க்கும்...

2024-12-04 17:08:55
news-image

விசாக்கா பட்டம் விடும் திருவிழா !

2024-12-02 19:43:15