(நெவில் அன்தனி)
தென் ஆபிரிக்காவுக்கு எதிராக டேர்பன் கிங்ஸ்மீட் விளையாட்டரங்கில் இதற்கு முன்னர் நடைபெற்ற 3 டெஸ்ட் போட்டிகளில் தோல்வி அடையாமல் இருந்த இலங்கை முதல் தடவையாக இந்த விளையாட்டரங்கில் தோல்வியை நெருங்கிக் கொண்டிருக்கிறது.
இரண்டு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 2ஆம், 3ஆம் நாட்களில் ஆதிக்கம் செலுத்திய தென் ஆபிரிக்கா, 2 போட்டிகள் கொண்ட தொடரில் 1 - 0 என முன்னிலை அடையக்கூடிய பலமான நிலையில் இருக்கிறது.
அத்துடன் உலக டெஸ்ட் சம்பயின்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதிபெறும் இலங்கையின் எதிர்பார்ப்பும் கேள்விக்குறியாகியுள்ளது.
தென் ஆபிரிக்காவினால் நிர்ணயிக்கப்பட்ட 516 ஒட்டங்கள் என்ற மிகவும் கடினமான வெற்றி இலக்கை நோக்கி 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிவரும் இலங்கை, இன்றைய 3ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்களை இழந்து 103 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
முன்வரிசை வீரர்கள் பெத்தும் நிஸ்ஸன்க (23), திமுத் கருணாரட்ன (4), ஏஞ்சலோ மெத்யூஸ் (25), கமிந்து மெண்டிஸ் (10) ஆகியோருடன் இராக்காப்பாளன் ப்ரபாத் ஜயசூரிய (1) ஆகியோரே ஆட்டம் இழந்தவர்களாவர்.
தினேஷ் சந்திமால் 29 ஓட்டங்களுடனும் அணித் தலைவர் தனஞ்சய டி சில்வா ஓட்டம் பெறாமலும் ஆட்டம் இழக்காதுள்ளனர்.
அவர்ளைவிட பிரதான வீரர்களில் குசல் மெண்டிஸ் மாத்திரமே எஞ்சியுள்ளார்.
பந்துவீச்சில் மாக்கோ ஜென்சென் 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கெகிசொ ரபாடா 34 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜெரால்ட் கோயெட்ஸீ 39 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
முன்னதாக போட்டியின் மூன்றாவது நாளான இன்று காலை தனது 2ஆவது இன்னிங்ஸை 3 விக்கெட் இழப்புக்கு 132 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த தென் ஆபிரிக்கா, 5 விக்கெட்களை இழந்து 366 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது துடுப்பாட்டத்தை நிறுத்திக்கொண்டது.
ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ், அணித் தலைவர் டெம்பா பவுமா ஆகிய இருவரும் மிகவும் பொறுமையுடன் துடுப்பெடுத்தாடி சதங்கள் குவித்ததுடன் 4ஆவது விக்கெட்டில் 249 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் தென் ஆபிரிக்கா சார்பாக 4ஆவது விக்கெட்டில் பகிரப்பட்ட அதிசிறந்த இணைப்பாட்டம் இதுவாகும்.
ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ் 221 பந்துகளை எதிர்கொண்டு 9 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 122 ஓட்டங்களையும் டெம்பா பவுமா 228 பந்துகளை எதிர்கொண்டு 9 பவுண்டறிகளுடன் 113 ஓட்டங்களையும் பெற்றனர்.
தனது ஆட்டம் இழப்புடன் இரண்டாவது இன்னிங்ஸை நிறுத்திக்கொள்வதாக டெம்பா பவுமா அறிவித்தார்.
பந்துவீச்சில் விஷ்வா பெர்னாண்டோ 64 ஓட்டங்களுக்கு 2 விக்pகெட்களையும் ப்ரபாத் ஜயசூரிய 132 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
முதலாவது இன்னிங்ஸில் தென் ஆபிரிக்கா 191 ஓட்டங்களையும் இலங்கை 42 ஓட்டங்களையும் பெற்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM