(நெவில் அன்தனி)
ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஷார்ஜா கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று வெள்ளிக்கிழமை (29) நடைபெற்ற நேபாளத்திற்கு எதிரான 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண பி குழு கிரிக்கெட் போட்டியில் 55 ஓட்டங்களால் இலங்கை வெற்றிபெற்றது.
சண்முகநாதன் ஷாருஜன், லக்வின் அபேசிங்க ஆகியோர் குவித்த அரைச் சதங்கள், ப்ரவீன் மனீஷ, ரஞ்சித்குமார் நியூட்டன், குகதாஸ் மாதுளன் ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சுக்கள் என்பன இலங்கையை இலகுவாக வெற்றபெறச் செய்தன.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை 50 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 233 ஓட்டங்களைப் பெற்றது.
கொட்டாஞ்சேனை புனித ஆசீர்வாதப்பர் அணித் தலைவர் ஷாருஜன் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 99 பந்துகளில் 62 ஓட்டங்களைப் பெற்றார்.
3ஆவது விக்கெட்டில் விமத் தின்சாரவுடன் 41 ஓட்டங்களைப் பகிர்ந்த ஷாருஜன், 4ஆவது விக்கெட்டில் லக்வின் அபேசிங்கவுடன் மேலும் 79 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.
லக்வின் அபேசிங்க 50 ஓட்டங்களைப் பெற்றார்.
ஷாருஜன், லக்வின் ஆகியோரைவிட கவிஜ கமகே 37 ஓட்டங்களையும் துல்னித் சிகேரா 24 ஓட்டங்களையும் பெற்றனர்.
234 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நேபாளம் 46.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 178 ஓட்டங்களைப் பெற்றது.
துடுப்பாட்டத்தில் மயன் யாதவ் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 90 பந்துகளில் 3 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 62 ஓட்டங்களைப் பெற்றார். ஆறு துடுப்பாட்ட வீரர்கள் இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றபோதிலும் அவர்களால் 20 ஓட்டங்களை எட்ட முடியாமல் போனது.
பந்துவீச்சில் ப்ரவீன் மனீஷ 30 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் யாழ். மத்திய கல்லூரி வீரர் ரஞ்சித்குமார் நியூட்டன் 17 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் யாழ். சென். ஜோன்ஸ் வீரர் குகதாஸ் மாதுளன் 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் விஹாஸ் தெவ்மிக்க 51 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
ஆட்டநாயகன்: சண்முகநாதன் ஷாருஜன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM