பில்லி, சூனிய பாதிப்புகளிலிருந்து தற்காத்துக்கொள்ள எளிய வழிமுறை

Published By: Digital Desk 7

29 Nov, 2024 | 06:30 PM
image

எம்மில் பலரும் நாளாந்தம் பணி நிமித்தம் வீட்டிலிருந்து வெளியே சென்று அதன் பிறகு மாலையிலோ அல்லது இரவிலோ வீடு திரும்புவோம். இந்த தருணங்களில் பழகிய பாதையாக இருந்தாலும் சில தருணத்தில் தனியாக அதனை கடக்கும் போது மனதில் அச்சம் அல்லது பயம் போன்ற சலனம் ஏற்படும்.

அதே தருணத்தில் எம்மில் பலருக்கும் பில்லி, சூனியம் பற்றிய ஏதேனும் ஒருவகையினதான கருத்தியல் மனதில் இருக்கும். இந்த இரண்டு காரணிகளும் மனிதர்களின் மனதை பலவீனப்படுத்தி தனிமையாகவோ அல்லது இருளிலிலோ  பிரத்யேக நிலவியல் பகுதியை கடந்து செல்லும்போது அச்சத்தை ஏற்படுத்துகிறது.

இது தொடர்பாக நண்பர்களிடம் எடுத்துரைக்கும் போது அவர்கள் பில்லி, சூனிய பாதிப்பு ஏற்பட்டிருக்க கூடும் என்று எளிதாக சொல்லிவிடுவார்கள்.

வேறு சிலர் தங்களது நாளாந்த நடவடிக்கைகளில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் பில்லி, சூனியத்தின் பாதிப்பாக இருக்குமோ..! என்று சந்தேகம் கொள்ளக் கூடும்.

வேறு சிலருக்கு அவர்களின் வளர்ச்சியை பொறுக்காமல் நண்பர்களோ உறவினர்களோ அல்லது எதிரிகளோ அவர்களின் வளர்ச்சிக்கு தடை விதிக்கும் வகையில் பில்லி , சூனியம் வைத்து விடுவார்கள். இதிலிருந்து இவர்கள் தங்களுக்கு தற்காத்துக் கொள்வதற்கு போராடுவார்கள்.

இந்தத் தருணத்தில் மாதந்தோறும் சந்திராஷ்டமம் வரும் நாட்களில் மனம் அலைபாய்ந்து சஞ்சலத்திற்கு ஆளாகும். இதன் காரணமாக சிலருக்கு பில்லி சூனிய பாதிப்பு ஏற்பட்டிருக்குமோ..! என்று அஞ்சுவார்கள். இதனால் எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் பில்லி, சூனியம் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்று சந்தேகம் அடைந்தாலோ அல்லது மனதில் அதுபோன்ற அச்ச உணர்வு இருந்தாலோ அதிலிருந்து தற்காத்துக் கொள்வதற்காக சில சூட்சுமமான குறிப்புகளை வழங்கியிருக்கிறார்கள்.

வியாழக்கிழமை தோறும் எலுமிச்சை பழம் ஒன்றை வாங்கி வந்து அதனை தலை சுற்றி இடது பாதத்திற்கு கீழ் வைத்து அழுத்தி விட வேண்டும். இதன் மூலம் உங்களையும் அறியாமல் பில்லி சூனிய பாதிப்பு இருந்தால் அதிலிருந்து விலகி விடலாம்.

மனதில் அச்ச உணர்வு இல்லாமல் இருப்பதற்கும் பில்லி சூனியம் பாதிப்பிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கும் வெள்ளெருக்கு வேரை எப்போதும் உடன் வைத்திருக்க வேண்டும். இந்த வெள்ளருக்கு வேரை உடன் வைத்திருந்தால் இத்தகைய பாதிப்பு எதுவும் எம்மை அண்டாது.

வெள்ளெருக்கு வேர் சிறிதளவு எடுத்து அதனை மோதிரமாக மாற்றி எம்முடைய இடது கையில் ஏதேனும் ஒரு விரலில் அணிந்து கொள்ளலாம். இதுவும் நமக்கு பில்லி, சூனியம் பாதிப்பிலிருந்து பாதுகாக்கும் வழங்கும் கேடயமாக திகழும்.

அதே தருணத்தில் பில்லி, சூனிய பாதிப்பு எமக்கு தெரியாமல் ஏற்பட்டிருந்தாலும் அதை பற்றி கவலைப்படாமல் மாதந்தோறும் ஒரு முறையாவது அருகில் இருக்கும் நீர்வீழ்ச்சிக்கு சென்று நீராடினால் இத்தகைய சூட்சமமான தடை அகலும்.

மலையில் இருந்து திரண்டு ஓடிவரும் நீருக்கு தோஷங்களை அகற்றும் வலிமை உள்ளது. இதனால் இத்தகைய நீர்வீழ்ச்சியில் நீராடும் போது உங்களுடைய உடல் மட்டுமல்ல உங்களுடைய மனம் மட்டுமல்ல  உங்களை சுற்றி இருக்கும் ஆரா எனும் மறைமுக ஆற்றலும் புத்தாக்கம் பெறுகிறது. அத்துடன் மனமும் வலிமை அடைகிறது.

எனவே மன வலிமை இல்லாதவர்கள் பில்லி சூனியத்தால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் மேலே சொன்ன எளிய வழிமுறையை கடைப்பிடித்தால் உங்களுடைய பாதிப்பிலிருந்து தற்காத்துக் கொள்ள முடியும்.

தொகுப்பு : சுபயோக தாசன். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடன் சுமை குறைவதற்கான எளிய பரிகாரம்...!?

2025-01-18 22:11:20
news-image

வருவாயை அதிகரித்துக் கொள்வதற்கான சூட்சுமமான வழிமுறை..!?

2025-01-17 17:01:03
news-image

தொழிலில் ஏற்படும் தடையை நீக்குவதற்கான எளிய...

2025-01-16 20:12:57
news-image

செல்லப் பிராணியை எப்போது வாங்கலாம்?

2025-01-15 17:39:12
news-image

ஒவ்வொருவரும் நாளாந்தம் பின்பற்ற வேண்டிய ஆன்மீக...

2025-01-13 15:56:39
news-image

குலதெய்வத்தின் அருளை பெறுவதற்கு எளிமையான வழிமுறை..!?

2025-01-09 15:26:03
news-image

எதிர்மறை ஆற்றலை அழித்து செல்வத்தை குவிக்கும்...

2025-01-08 19:26:11
news-image

கல்வியில் தேர்ச்சி பெறுவதற்கான எளிய குறிப்புகள்..!?

2025-01-07 16:03:17
news-image

ஆகமி கிரகத்தின் அருளை பெறுவதற்கான சூட்சம...

2025-01-06 16:36:08
news-image

சொந்த வீட்டு கனவை நனவாக்கும் சூட்சம...

2025-01-05 17:49:20
news-image

நாம் அனைவரும் சாதிப்பதற்கான சூட்சம குறிப்பு..!?

2025-01-03 16:55:59
news-image

சனியின் தாக்கத்தை குறைக்கும் எள்ளுருண்டை !

2024-12-31 15:15:31