மாயன் - திரைப்பட விமர்சனம்

29 Nov, 2024 | 05:48 PM
image

மாயன் - திரைப்பட விமர்சனம்

தயாரிப்பு : ஃபாக்ஸ் & குரோ ஸ்டுடியோஸ் -  ஜி கே வி எம் எலிபென்ட் பிக்சர்ஸ்

நடிகர்கள் : வினோத் மோகன், பிந்து மாதவி, ஜான் விஜய், 'ஆடுகளம்' நரேன், சாய் தீனா, ரஞ்சனா நாச்சியார், கஞ்சா கருப்பு, ராஜ சிம்மன் மற்றும் பலர்.

இயக்கம் : ஜெ. ராஜேஷ் கண்ணா

மதிப்பீடு : 2 /5

''இந்தியாவில் தயாரான திரைப்படங்களில் உள்ளடக்கத்தை பொருத்தவரை அதீத கிராபிக்ஸ் காட்சிகள் கொண்ட திரைப்படம்'' என இயக்குநர் வெளியீட்டிற்கு முன் சொன்னதால்  படத்தைப் பற்றிய குறைந்தபட்ச எதிர்பார்ப்புடன் பட மாளிகைக்கு ரசிகர்கள் சென்றனர். அவர்களை படக் குழுவினர் பிரமிக்க வைத்தார்களா? இல்லையா? என்பதனை தொடர்ந்து காண்போம்.

கதையின் தொடக்கத்திலேயே இந்த படைப்பு இந்து மதத்தின் மற்றும் புராணங்களின் அடிப்படையில் ஜென்ம ஜென்மமாக தொடரும் பகைமையை விவரிக்கிறது. நாயகனுக்கும், வில்லனுக்கும் மூன்று ஜென்மங்களாக நடைபெறும் போட்டியில் நாயகன் வெல்கிறான். வில்லன் வீழ்கிறான். தற்போது இந்த பிறவியில் என... கதை தொடங்குகிறது.

கொர்ப்பரேட் நிறுவனம் ஒன்றில் ஊழியராக பணியாற்றுகிறார் கதையின் நாயகனான ஆதி ( வினோத் மோகன்). அந்த நிறுவனத்தின் உரிமையாளர் ( ஆடுகளம் நரேன்) ஆதியை தரக்குறைவாக நடத்துகிறார்.

ஆனால் அதனை ஆதி -  தன் வருவாயை நம்பி தன் குடும்பம் இருப்பதால் பொறுமையுடனும், நிதானமாகவும் எதிர்கொள்கிறார். அதே தருணத்தில் அந்த நிறுவனத்தின் உரிமையாளரின் மகளான கோப்பெருந்தேவி ( பிந்து மாதவி) ஆதிக்கு ஆதரவாக பேசுகிறார்.

இந்த தருணத்தில் ஆதிக்கு மின்னஞ்சல் ஒன்று வருகிறது. அதில் அவர் சிவனின் பிள்ளை என்றும், உனக்கு மட்டும் ஒரு ரகசியம் சொல்கிறோம் என்றும், இந்த உலகம் 13 நாளில் அழியப் போகிறது என்றும் குறிப்பிடப்படுகிறது. அதன் பிறகு என்ன நடக்கிறது? என்பதுதான் கதை.

படத்தின் கதை ஆன்மீகம் தொடர்பானதாக இருப்பதால்.. அதனை விவரிப்பதற்கு இயக்குநர் கிராபிக்ஸை பெரிதாக நம்பி இருக்கிறார். இது உச்சகட்ட காட்சியை தவிர வேறு எங்கும் சோபிக்கவில்லை. மாறாக சில இடங்களில் எரிச்சலையும் உண்டாக்குகிறது.

கதையின் நாயகனான ஆதி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் வினோத் மோகன் ஓரளவு நடிக்க முயற்சி செய்திருக்கிறார். அவருடைய தோற்றம்- வசன உச்சரிப்பை விட - சண்டைக் காட்சிகளில் அருமையாக நடித்திருக்கிறார். கோப்பெருந்தேவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகை பிந்து மாதவி ஒவ்வொரு காட்சியிலும் ஒவ்வொரு விதமாக தோன்றி ரசிகர்களை ஆச்சரியப்படுத்துகிறார்.‌ வில்லனாக நடித்திருக்கும் சாய் தீனா வழக்கம்போல் நன்றாக நடித்து ரசிகர்களின் அன்பை பெறுகிறார்.

இயக்குநரின் வித்தியாசமான கதை சொல்லும் பாணிக்கு ஒளிப்பதிவாளர் உதவியது போல் இசையமைப்பாளர் உதவவில்லை. பின்னணி இசை என்ற பெயரில் இரைச்சலை பார்வையாளர்களுக்கு கடத்துகிறார்.

உலகம் அழியப் போகிறது என்ற விடயத்தை கையில் எடுத்துக் கொண்டு அதனை விறுவிறுப்பாக சொல்ல முயன்று ரசிகர்களை சோதிக்கிறார் இயக்குநர். இந்த விடயத்தில் உச்சகட்ட காட்சி சிறப்பாக இருந்தாலும்.. ஏனைய காட்சிகள் சோர்வை தருவதால் ரசிகர்களுக்கு அயர்ச்சி தான் ஏற்படுகிறது.

மாயன் - கிராபிக்ஸ் பரிதாபங்கள்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெற்றிமாறனின் 'விடுதலை 2' படத்தின் பின்னணி...

2024-12-07 17:19:24
news-image

'இசை அசுரன்' ஜீ .வி பிரகாஷ்...

2024-12-07 17:18:13
news-image

இந்திய சினிமா வரலாற்றில் புதிய வசூல்...

2024-12-07 17:17:57
news-image

சசிகுமார் நடிக்கும் 'டூரிஸ்ட் ஃபேமிலி' எனும்...

2024-12-07 17:18:28
news-image

நடிகர் ஸ்ரீராம் கார்த்திக் நடிக்கும் 'மெசன்ஜர்...

2024-12-07 17:19:04
news-image

'பிக் பொஸ்' பாலாஜி முருகதாஸ் நடிக்கும்...

2024-12-07 17:20:01
news-image

'புஷ்பா 2 - தி ரூல்'-...

2024-12-06 17:28:33
news-image

ஃபேமிலி படம் - திரைப்பட விமர்சனம்

2024-12-06 17:03:21
news-image

டிஜிட்டல் தள பார்வையாளர்களிடத்தில் வரவேற்பு பெற்ற...

2024-12-06 15:52:35
news-image

நடிகர் குரு சோமசுந்தரம் நடிக்கும் 'போத்தல்...

2024-12-04 17:22:59
news-image

மெகா ஸ்டார்' சிரஞ்சீவியை இயக்கும் இயக்குநர்...

2024-12-04 17:23:34
news-image

'இசை ஞானி' இளையராஜா இசையில் திரைப்படமாக...

2024-12-04 17:22:18