கிளியோபிளாஸ்டோமா மல்டிஃபார்ம் எனும் புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் நவீன கதிர்வீச்சு சிகிச்சை

29 Nov, 2024 | 05:49 PM
image

எம்மில் பலருக்கு தலைவலி என்பது இயல்பாக ஏற்படக்கூடிய பாதிப்பாகும்.  சிலருக்கு தலைவலி என்பது திடீரென்று ஏற்பட்டு, வலி வீரியமானதாகவும்... தாங்க இயலாத ஒன்றாகவும் இருக்கும்.

 இத்தகைய அறிகுறி மூளையில் ஏற்படும் கிளியோபிளாஸ்ட்டோமா எனப்படும் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம் என வைத்தியர்கள் அவதானிக்கிறார்கள். 

இத்தகைய அரிய பாதிப்பிற்கு நவீன கதிர்வீச்சு சிகிச்சை மூலம் நிவாரணம் வழங்க இயலும் என்றும் வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

எம்முடைய மூளை பகுதியில் ஏற்படும் கட்டி பாதிப்புகளில் பெரும்பாலானவர்களுக்கு கிளியோபிளாஸ்டோமா மல்டிஃபார்மிங் எனப்படும் புற்றுநோய் கட்டி என அண்மைய ஆய்வு மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது. 

மேலும் ஆண்டுதோறும் உலக அளவில் இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட புதிய மூளை புற்றுநோய் நோயாளிகள் கண்டறியப்படுகிறார்கள் என்றும், இவர்களது ஆயுள்- மூளை கட்டி அவதானித்த பிறகு இரண்டு ஆண்டுகள் வரை மட்டுமே நீடிக்கிறது என்றும் அவர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். 

பொதுவாக மூளையில் உள்ள செல்களில் இருந்து உருவாகும் இத்தகைய புற்றுநோய் கட்டிகள் மூளையின் நரம்பு செல்களை பாதிக்கிறது. இதனால் எம்முடைய இயக்கம் தொடர்பான செயல்பாடுகளில் பாரிய பக்க விளைவு ஏற்படுகிறது.

பெரும்பாலும் மரபணு குறைபாட்டின் காரணமாகவும் இத்தகைய பாதிப்பு ஏற்பட்டாலும் .‌ இன்னும் இது தொடர்பான ஆய்வுகள் நீடிக்கிறது.

 தற்போது வரை தலைவலி, வலிப்பு பாதிப்பு, குமட்டல் & வாந்தி, தூக்க கலக்கம், ஆளுமையில் தடுமாற்றம், உடலில் வலது அல்லது இடது என ஏதேனும் ஒரு பகுதியில் பலவீனமாக உணர்வது, நினைவு திறன் இழப்பு , பேசுவதில் தடுமாற்றம், பார்வையில் குறைபாடு.. இது போன்ற அறிகுறிகள் இருந்தால் உங்களுடைய மூளைப்பகுதியில் ஏதேனும் ஒரு வகையினதான புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டிருக்க கூடும் என அவதானிக்கலாம்.

இத்தகைய அறிகுறி ஏற்பட்டவர்களுக்கு வைத்தியர்கள் எம் ஆர் எஸ் ஸ்கேன் சிடி ஸ்கேன் ஆகியவற்றை ஆகிய பரிசோதனைகள் மூலம் பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானிக்கிறார்கள். 

அதன் பிறகு இத்தகைய பாதிப்பை எந்த சிகிச்சை மூலம் நிவாரணம் அளிக்கலாம்? என தீர்மானிக்கிறார்கள். மூளைப் பகுதியில் ஏற்பட்டிருக்கும் கட்டியை சத்திர சிகிச்சை மூலம் அகற்றுவதில் கடும் சவால்கள் இருப்பதால்.. தற்போது நவீன கதிர்வீச்சு சிகிச்சை மூலம் இதற்கு நிவாரணம் வழங்குகிறார்கள்.

 இத்தகைய நவீன கதிர்வீச்சு சிகிச்சை மூலம் மூளை புற்று நோய் கட்டி அளவினை குறைத்து இயக்கத்தை மீட்டெடுக்கிறார்கள்.  

கிளியோபிளாஸ்டோமா மல்டி ஃபார்மிங் எனப்படும் மூளை புற்று நோய்க்கு தற்போது கண்டறியப்பட்டிருக்கும் நவீன கதிர்வீச்சு சிகிச்சை மூலம் நிவாரணம் கிடைக்கிறது.

வைத்தியர் ஷாலினி

தொகுப்பு அனுஷா  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தற்காலிக சிறுநீரக பாதிப்புக்கு நிவாரணமளிக்கும் நவீன...

2024-12-04 17:39:54
news-image

சினைப்பை நீர்க்கட்டி பாதிப்பை சீரமைக்கும் நவீன...

2024-12-03 16:32:15
news-image

தைரொய்ட் கட்டி பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும்...

2024-12-02 17:14:34
news-image

கிளியோபிளாஸ்டோமா மல்டிஃபார்ம் எனும் புற்றுநோய் பாதிப்பிற்கு...

2024-11-29 17:49:15
news-image

தோலில் ஏற்படும் பாதிப்புகளுக்கு நிவாரணம் அளிக்கும்...

2024-11-28 18:26:24
news-image

முழங்கால் மூட்டு காயத்தை விரைவாக நிவாரணம்...

2024-11-27 15:58:05
news-image

ரேடியல் நரம்பு வாத பாதிப்பிற்குரிய நவீன...

2024-11-26 18:17:04
news-image

ஹீமோடயாபில்ட்ரேசன் - சிறுநீரக நோயாளிகளுக்கான நவீன...

2024-11-25 19:16:34
news-image

புற்றுநோய் பாதிப்புக்கு நிவாரணம் அளிக்கும் நவீன...

2024-11-20 18:30:48
news-image

பக்கவாத பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும் நவீன...

2024-11-18 16:30:21
news-image

குருதி புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும்...

2024-11-16 16:34:33
news-image

நீரிழிவு நோயால் பாதம் பாதிக்கப்பட்டிருக்கிறதா? என்பதை...

2024-11-15 16:10:38