அபா இசை நிகழ்ச்சிக்காக 10 இலட்சம் ரூபா செலவிடுவது தான் முறைமை மாற்றமா ? - ராஜித கேள்வி

29 Nov, 2024 | 05:32 PM
image

(எம்.மனோசித்ரா)

அபா இசை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் 10 இலட்சம் ரூபாவை செலவிட்டுள்ளனர். அந்த 10 இலட்சம் ரூபாவில் வருமையிலுள்ள மக்களுக்கு நிவாரணங்களை வழங்கியிருக்கலாமல்லவா? முறைமை மாற்றத்தை ஏற்படுத்துவதாகக் கூறி ஆட்சியைக் கைப்பற்றியவர்களின் செயற்பாடுகள் இவ்வாறு தான் அமைந்துள்ளன என முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

இன்று வெள்ளிக்கிழமை (29)  கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அரசாங்கம் நாளுக்கு நாள் வழங்கிய வாக்குறுதிகளுக்கு எதிராக செயற்பட்டு வருகிறது. ஜே.வி.பி.யும் தேசிய மக்கள் சக்தியும் தம்மைத் தவிர ஏனைய அனைவரும் கள்வர்கள் என்பதையே மக்கள் மனதில் பதியச் செய்துள்ளனர். ஏனைய அரசியல்வாதிகள் அனைவரையும் கள்வர்களாக்கியுள்ளனர்.

ஆனால் இன்று அவர்கள் என்ன செய்கின்றனர்? 50 000 ரூபா டிக்கட் பெற்று இசை நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். இவர்களது ஆட்சியைப் பார்க்கும் போது ரஷ்ய ஆட்சியே நினைவுக்கு வருகிறது. அந்த இசை நிகழ்ச்சியில் ஒரு மேசைக்கு 5 இலட்சம் ரூபாவாகும். இவர்கள் 10 இலட்சத்துக்கு இரு மேசைகளை முன்பதிவு செய்திருக்கின்றனர்.

அந்த 10 இலட்சம் ரூபாவில் வருமையிலுள்ள மக்களுக்கு நிவாரணங்களை வழங்கியிருக்கலாமல்லவா? பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் அதிசொகுசு வாகனங்களைப் பயன்படுத்துவதாகக் கூறினர். ஆனால் இன்று அவர்களும் அதே வாகனங்களையே பயன்படுத்துகின்றனர். நல்லாட்சி அரசாங்கத்தில் எவருக்கும் புதிய வாகனங்கள் வழங்கப்படவில்லை.

முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்துவதாகக் கூறியவர்கள் இதுவரை அதற்கான எந்தவொரு நடவடிக்கையையும் முன்னெடுக்கவில்லை. தாம் பதவிகளை ஏற்றாலும் பேரூந்திலேயே பாராளுமன்றம் வருவோம் என்றும், வீட்டிலிருந்து உணவு கொண்டு வருவோம் என்றும் கூறியவர்கள் இன்று அதனை பின்பற்றுகின்றனரா? என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக நாளாந்தம் ...

2024-12-08 18:10:44
news-image

வவுனியாவில் பொலிஸார் திடீர் சோதனை :...

2024-12-08 18:22:03
news-image

ஹம்பேகமுவ பகுதியில் கஞ்சா தோட்டம் கண்டுபிடிப்பு...

2024-12-08 19:07:11
news-image

கரடியனாறு பகுதியில் ஜீப் மோதி பாதசாரி...

2024-12-08 18:59:50
news-image

கண்டியில் ஹெரோயினுடன் இருவர் கைது

2024-12-08 18:55:09
news-image

கைதான 8 தமிழக மீனவர்களுக்கும் விளக்கமறியல் 

2024-12-08 17:05:54
news-image

புத்தளத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

2024-12-08 17:25:01
news-image

யாழில் கைப்பற்றப்பட்ட 44 கேரள கஞ்சாப்...

2024-12-08 17:20:37
news-image

பூகொடையில் சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது

2024-12-08 18:50:21
news-image

அத்துருகிரியவில் ஹெரோயினுடன் ஒருவர் கைது

2024-12-08 18:48:52
news-image

அநுர அரசாங்கத்தின் மீதும் நம்பிக்கை இல்லை...

2024-12-08 18:46:47
news-image

யாழில் வெள்ள நிவாரணப் பொருட்களை இந்திய...

2024-12-08 16:45:05