அவுஸ்திரேலியாவில் கிரிக்கெட் விளையாடுவது எப்போதும் சவாலான விடயம்- அவுஸ்திரேலிய வீரர்கள் மிகுந்த போட்டிதன்மை மிக்கவர்கள் - அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் ரோகித்சர்மா

29 Nov, 2024 | 05:12 PM
image

அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் விசேட உரையாற்றியுள்ள இந்திய அணியின் தலைவர் ரோகித் சர்மா அவுஸ்திரேலிய அணியின் போட்டி மனப்பான்மையை பாராட்டியுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் கிரிக்கெட் விளையாடுவது இந்திய அணிக்கு எப்போதும் சவாலான விடயம் என்பதை அவர் ஏற்றுக்கொண்டுள்ளார்.

தனது உரையில் ரோகித்சர்மா இருநாடுகளிற்கும் இடையிலான கிரிக்கெட் போட்டியின் தீவிரதன்மையை சுட்டிக்காட்டியுள்ள அவர் இருநாடுகளிற்கும் இடையிலான வலுவான உறவை கொண்டாடியுள்ளார்.

இந்திய அவுஸ்திரேலிய உறவுகள் மிக நீண்டகால வரலாற்றை கொண்டவை - விளையாட்டு  என்றாலும் வர்த்தக விவகாரங்கள் என்றாலும் சரி என தெரிவித்துள்ள ரோகித்சர்மா கடந்த பல வருடங்களாக நாங்கள் இங்கு வந்து கிரிக்கெட் விளையாடுவதையும் பல்வகை கலாச்சாரத்தை மிகவும் விரும்பி அனுபவித்துள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.

கிரிக்கெட் குறித்து அவுஸ்திரேலிய மக்கள் கொண்டுள்ள தீவிர ஆர்வம் காரணமாகவும் ஒவ்வொரு வீரரினது போட்டி தன்மை காரணமாகவும்  ஏனைய நாடுகளின் அணிகள் விஜயம் மேற்கொண்டு விளையாடுவதற்கு மிகவும் சவாலான இடம் அவுஸ்திரேலியா என தெரிவித்துள்ள ரோகித்சர்மா இதன்காரணமாக இங்கு வந்து கிரிக்கெட் விளையாடுவது எங்களிற்கு எப்போதும் சவாலான விடயமாக காணப்படுகின்றது என தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களிலும் கடந்த வாரமும் எங்களிற்கு சில வெற்றிகள் கிடைத்தன,இதனை தொடர்ந்து தக்கவைப்பதற்கு நாங்கள் முயற்ச்சிக்கின்றோம்,அவுஸ்திரேலியாவின் கலாச்சாரத்தையும் அனுபவிக்க விரும்புகின்றோம்,ஒவ்வொரு விதமான நகரங்கள் காணப்படுவது எங்களிற்கு வித்தியாசமான உணர்வை ஏற்படுத்துகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் இங்கு வந்து எங்கள் சுற்றுப்பயணத்தை அனுபவிக்க விருப்பம் கொண்டவர்கள்,அடுத்த சில வாரங்களிற்கு எங்களால்  அவுஸ்திரேலிய மக்களையும்,நாங்கள் இங்கு சாதிக்க விரும்புவதை சாத்தியமாக்குவதில் பெரும் பங்களிப்பு செய்யும் இந்திய ரசிகர்களையும் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்த முடியும் என நாங்கள் கருதுகின்றோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியாவை 10 விக்கெட்களால் வென்ற அவுஸ்திரேலியா,...

2024-12-08 16:59:14
news-image

பிடியைத் தளரவிட்டது இலங்கை; கடைசி 6...

2024-12-07 23:20:09
news-image

அட்கின்சன் ஹெட்-ட்ரிக், டக்கெட், பெத்தெல் துடுப்பாட்டத்தில்...

2024-12-07 18:48:25
news-image

15 வயதின் கீழ் ஸ்ரீலங்கா இளையோர்...

2024-12-07 09:47:46
news-image

பொறுப்புணர்வுடன் துடுப்பெடுத்தாடுகிறது இலங்கை; 2ஆம் நாள்...

2024-12-06 23:00:27
news-image

ஸ்டாக் 6 விக்கெட்களை வீழ்த்த இந்தியா...

2024-12-06 18:53:12
news-image

19 வயதின் கீழ் ஆசிய கிண்ண...

2024-12-06 17:35:06
news-image

19 வயதின் கீழ் ஆசிய கிண்ண...

2024-12-06 17:29:25
news-image

ஆசிய கிரிக்கெட் பேரவைத் தலைவர் பதவியை ...

2024-12-06 16:40:42
news-image

டெஸ்ட் கிரிக்கெட்டில் லஹிரு குமார 100...

2024-12-06 15:35:44
news-image

இங்கிலாந்தை மீண்டும் மீட்டெடுத்த ப்றூக், போப்

2024-12-06 14:53:40
news-image

சம்பியன்ஸ் கிண்ணம் உட்பட 2027 வரை...

2024-12-06 10:42:22