தேர்தல் முடிவினை வைத்து தமிழ் மக்களை கணிப்பிடாதீர்கள் ; சீன தூதுவருக்கு யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் பதில்

29 Nov, 2024 | 08:20 PM
image

நாடாளுமன்ற தேர்தல் முடிவினை அடிப்படையாக கொண்டு தமிழ் மக்களின் தீர்வினை சீனா கணிப்பிடமுடியாது என யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் மனோகரன் சோமபாலன் தெரிவித்தார்.

அண்மையில் யாழ் மாவட்டத்திற்கு வருகை தந்த சீனதூதுவர் தமிழ் மக்கள் மாற்றத்திற்கு வாக்களித்து தமது தீர்வு தொடர்பில் வெளிப்படுத்தியுள்ளனர் என தெரிவித்தார்.

இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

சீன தூதுவருக்கு சிறிய தெளிவு படுத்தல் ஒன்றினை வழங்க விரும்புகின்றேன். தமிழ் மக்களை பொறுத்தவரையில் காணாமாலாக்கபட்டவர்களுக்கான தீர்வுகள் இன்னமும் கிடைக்கவில்லை. 

அரசியல் கைதிகள் இன்றுவரை விடுவிக்கப்படவில்லை. தமிழ் மக்களின் இனப்படுகொலை இன்றுவரை தொடர்ந்து வருகின்றது. தமிழ் மக்கள் இன்றுவரை அரசியல்ரீதியாக ஒடுக்கப்பட்டு வருகின்றார்கள்.

அந்த அடக்குமுறையின் வீரியமும் வெளிப்படுகைகளும் மாறியிருக்கின்றன தவிர தமிழர் இன்றும் அடக்குமுறைக்கு உட்பட்ட இனமாகவே இருக்கின்றார்கள்.

இன்று வரை தமிழ் மக்கள் தேசிய இனமாகவே இருக்கிறார்கள். அண்மையில் இடம்பெற்ற தேர்தலை அடிப்படையாக வைத்து கொண்டு தமிழ் மக்களின் அரசியலை தீர்மானிப்பது எந்தவகையிலும் பொருத்தமற்றது.

வெறுமனே பாராளுமன்ற தேர்தல் மட்டும் தமிழ் மக்களின் அரசியல் அல்ல அதையும் தாண்டி உள்ளது. ஆகவே இது தொடர்பில் எங்களுடைய பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மிக தெளிவாக அதனை குறிப்பிட்டுள்ளது.  

கலைப்பீட மாணவர் ஒன்றியம் என்ற வகையில் பெரும்பாலும் தமிழ் மக்களினுடைய நிலை என்ற வகையிலும் எந்த ஒரு நாடும் எமக்கு எதிரி நாடும் இல்லை நட்பு நாடும் இல்லை என்பது எங்களுடைய தத்துவமாக இருக்கின்றது. அதில் நாங்கள் நூறு விகிதம் தெளிவாக இருக்கின்றோம்.

தமிழ் மக்களினை பொறுத்தவரை தமிழ் மக்கள் திட்டமிடப்பட்ட இன அழிப்பிற்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றார்கள் . கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றார்கள். 

கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை தான் இனப்படுகொலை என்பது வெறுமனே உயிர்ரீதியாக மாத்திரமன்றி பண்பாடுரீதியாக பொருளாதாரரீதியாக  மேற்கொள்ளப்படுவது ஆகும்  என்றார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக நாளாந்தம் ...

2024-12-08 18:10:44
news-image

வவுனியாவில் பொலிஸார் திடீர் சோதனை :...

2024-12-08 18:22:03
news-image

ஹம்பேகமுவ பகுதியில் கஞ்சா தோட்டம் கண்டுபிடிப்பு...

2024-12-08 19:07:11
news-image

கரடியனாறு பகுதியில் ஜீப் மோதி பாதசாரி...

2024-12-08 18:59:50
news-image

கண்டியில் ஹெரோயினுடன் இருவர் கைது

2024-12-08 18:55:09
news-image

கைதான 8 தமிழக மீனவர்களுக்கும் விளக்கமறியல் 

2024-12-08 17:05:54
news-image

புத்தளத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

2024-12-08 17:25:01
news-image

யாழில் கைப்பற்றப்பட்ட 44 கேரள கஞ்சாப்...

2024-12-08 17:20:37
news-image

பூகொடையில் சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது

2024-12-08 18:50:21
news-image

அத்துருகிரியவில் ஹெரோயினுடன் ஒருவர் கைது

2024-12-08 18:48:52
news-image

அநுர அரசாங்கத்தின் மீதும் நம்பிக்கை இல்லை...

2024-12-08 18:46:47
news-image

யாழில் வெள்ள நிவாரணப் பொருட்களை இந்திய...

2024-12-08 16:45:05