அம்பாறையில் உஹன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கலபிடகல பிரதேசத்தில் காணாமல்போன நபரொருவர் நேற்று வியாழக்கிழமை (28) சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் கலபிடகல பிரதேசத்தை சேர்ந்த 25 வயதுடையவர் ஆவார்.
கடந்த 27ஆம் திகதி கலபிடகல பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது மருமகன் காணாமல்போயுள்ளதாக செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் உஹன பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
காணாமற்போனவர் அன்றைய தினம் (27) சந்தைக்கு செல்வதாக கூறிவிட்டு, மோட்டார் சைக்கிளில் வந்த நபருடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
இந்நிலையில், நேற்று கே.சி. கொலனியை சேர்ந்த ஒருவர் இறந்துவிட்டதாக உஹன பொலிஸ் நிலையத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், உயிரிழந்தவர் காணாமல் போன நிலையில் தேடப்பட்டு வந்த நபர் என்பது தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அம்பாறை வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டு, தற்போது பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை உஹன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM