(நா.தனுஜா)
கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரத்தின் மீது மட்டுமீறிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதற்கு ஏதுவாக அமையக்கூடிய நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தை பல்துறைசார் நிபுணர்களின் பங்கேற்புடன், மனித உரிமைகள் நியமங்களுக்கு ஏற்புடையவாறு திருத்தியமைப்பதற்குரிய வலுவானதும், வெளிப்படைத்தன்மை வாய்ந்ததுமான அணுகுமுறையைப் புதிய பாராளுமன்றம் பின்பற்றவேண்டியது அவசியம் என உலகளாவிய வலையமைப்பு செயற்திட்டம் (குளோபல் நெட்வேர்க் இனிசியேட்டிவ்) வலியுறுத்தியுள்ளது.
சர்ச்சைக்குரிய நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி உலகளாவிய வலையமைப்பு செயற்திட்டத்தினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது;
நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தைத் திருத்துவதற்கு இலங்கை அரசாங்கம் மேற்கொண்டிருக்கும் தீர்மானத்தை வரவேற்கின்றோம். நாம் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து அதனை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றோம்.
அதுமாத்திரமன்றி தனியுரிமை மற்றும் கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரம் ஆகியவற்றின்மீது இச்சட்டம் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் குறித்து எமது முன்னைய அறிக்கையில் வெளிப்படுத்தியிருந்த கரிசனைகளை மீளவும் சுட்டிக்காட்டுகின்றோம்.
கடந்த ஓகஸ்ட் மாதம் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தில் முதற்கட்டமாகத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், தேசிய மற்றும் சர்வதேச சட்டங்களின் பிரகாரம் இலங்கையால் உத்தரவாதமளிக்கப்பட்டுள்ள மனித உரிமைசார் கொள்கைகளை மீறும் வகையிலான சில சரத்துக்கள் இன்னமும் இச்சட்டத்தில் உள்ளடக்கியிருக்கின்றன.
எனவே விசேட நிபுணர்கள் மற்றும் பல்துறைசார் வல்லுனர்களின் பங்கேற்புடன், மனித உரிமைகளுக்கு ஏற்புடையவாறு இந்த நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தைத் திருத்தியமைப்பதற்குரிய வலுவானதும், வெளிப்படைத்தன்மை வாய்ந்ததுமான அணுகுமுறையை தற்போதைய புதிய பாராளுமன்றம் பின்பற்றவேண்டியது அவசியமாகும்.
அதேவேளை பரந்துபட்ட மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதற்கு புதிய அரசாங்கம் ஆதரவு வழங்கும் என்பதால், நிகழ்நிலை பாதுகாப்பைப் பொறுத்தமட்டில் உலகின் சிறந்த நடைமுறைகளுடன் இணைந்த, தெளிவான நோக்கத்துடன் கட்டமைக்கப்பட்ட புதியதொரு சட்டத்தை உருவாக்குவதே சிறந்த வழி என்பNது எமது பரிந்துரையாகும்.
இச்சட்டத்தில் கடந்த ஓகஸ்ட் மாதம் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களின் பிரகாரம் நிகழ்நிலை பாதுகாப்பு ஆணைக்குழுவின் செயற்பாடுகளுக்கு கூடுதல் வெளிப்படைத்தன்மையை வழங்கல் போன்ற சில சாதக மாற்றங்கள் உள்வாங்கப்பட்டிருப்பினும், சட்டத்தில் உள்ள ஏனைய எதிர்மறை விடயங்கள் நிவர்த்திசெய்யப்படவில்லை.
அதுமாத்திரமன்றி சில திருத்தங்களின் ஊடாக ஏற்கனவே காணப்பட்ட சிக்கல் தன்மை மேலும் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. அத்தோடு 'தவறான' மற்றும் 'தடைசெய்யப்பட்ட' ஆகிய பதங்களின் வரையறைகள் தெளிவற்றவையாகவே காணப்படுகின்றன. இது கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரத்தின் மீது மட்டுமீறிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதற்கு ஏதுவாக அமைந்துள்ளது.
எனவே, இந்த நிகழ்நிலை பாதுகாப்பு சட்டக்கட்டமைப்பினுள் சட்டபூர்வத்தன்மை, விகிதாசாரத்துவம் மற்றும் சர்வதேச மனித உரிமைகள்சார் கொள்கைகள் என்பவற்றை இணைப்பதன் மூலமும், கருத்து சுதந்திரம் மற்றும் தனியுரிமைக்கான உரிமை ஆகியவற்றை இச்சட்டத்தை நெறிப்படுத்தும் கொள்கைகளாக சாதமான முறையில் உறுதிப்படுத்துவதன் ஊடாகவும் இச்சட்டத்தின் ஊடாக நிகழக்கூடிய மீறல்களைத் தடுக்கமுடியும் என்று உலகளாவிய வலையமைப்பு செயற்திட்டம் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM