கலாம் 4 ஏவுகணை வெற்றிகரமாக சோதனை: சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

29 Nov, 2024 | 12:04 PM
image

விசாகப்பட்டணம்: அணு ஆயுத தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட கலாம் 4 ஏவுகணை நீர்மூழ்கியில் இருந்து வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. இந்த ஏவுகணை 3500 கி.மீ. சீறிப் பாய்ந்து துல்லியமாக இலக்கை அழித்தது.

அணு சக்தியில் இயங்கும் இந்தியாவின் முதல் நீர்மூழ்கியான ஐஎன்எஸ் அரிஹந்த் கடந்த 2016-ம் ஆண்டில் கடற்படையில் சேர்க்கப்பட்டது. இந்த நீர்மூழ்கியில் 750 கி.மீ. தொலைவு பாயும் திறன் கொண்ட கலாம் 15 ரக ஏவுகணைகள் பொருத்தப்பட்டு உள்ளன. இந்தியாவின் இரண்டாவது அணு சக்தி நீர்மூழ்கியான ஐஎன்எஸ் அரிகாட் கடந்த ஆகஸ்ட் மாதம் கடற்படையில் இணைக்கப்பட்டது. விசாகப்பட்டினம் கடற்படைத் தளத்தை மையமாக கொண்டு இயங்கும் இந்த நீர்மூழ்கியில் 3500 கி.மீ. சீறிப் பாயும் கலாம் 4 ரக ஏவுகணைகள் பொருத்தப்பட்டு உள்ளன.

கடந்த 27-ம் தேதி ஐஎன்எஸ் அரிகாட் நீர்மூழ்கியில் இருந்து கலாம் 4 ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. கடலுக்கு அடியில் முகாமிட்டிருந்த நீர்மூழ்கியில் இருந்து சீறிப் பாய்ந்த ஏவுகணை 3500 கி.மீ. தொலைவில் இருந்த இலக்கை துல்லியமாக தாக்கி அழித்தது. கலாம் 4 ஏவுகணைகள் அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்டவை. இதுகுறித்து இந்திய கடற்படை வட்டாரங்கள் கூறியது: 'நீர்மூழ்கியில் இருந்து அணு ஆயுத தாக்குதல் நடத்தும் திறன் அமெரிக்கா ரஷ்யா பிரிட்டன் பிரான்ஸ் சீனா ஆகிய 5 நாடுகளிடம் மட்டுமே உள்ளது.

இந்த பட்டியலில் 6-வது நாடாக இந்தியாவும் இணைந்திருக்கிறது. ஐஎன்எஸ் அரிஹந்த் நீர்மூழ்கியில் பொருத்தப்பட்டிருக்கும் கலாம் 15 ரக ஏவுகணைகள் மூலம் 750 கி.மீ. வரை மட்டுமே தாக்குதல் நடத்த முடியும். அதாவது பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் மீது மட்டுமே தாக்குதல் நடத்த முடியும்.

தற்போது ஐஎன்எஸ் அரிகாட் நீர்மூழ்கியில் இருந்து 3500 கி.மீ. தொலைவு சீறிப் பாயும் கலாம் 4 ரக ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளோம். இதன்மூலம் சீனா உள்ளிட்ட நாடுகள் மீதும் அணு ஆயுத தாக்குதல் நடத்த முடியும். அடுத்தகட்டமாக ஐஎன்எஸ் அரிதமன் என்ற அணுசக்தி நீர்மூழ்கி தயாரிக்கப்பட்டு வருகிறது. இது வரும் 2025-ம் ஆண்டில் கடற்படையில் இணைக்கப்படும்.

இந்த நீர்மூழ்கியிலும் கலாம் 4 ஏவுகணைகள் பொருத்தப்படும். இந்தியாவின் 4-வது அணு சக்தி நீர்மூழ்கி தயாரிக்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பெயரிடப்படாத இந்த நீர்மூழ்கியில் 5000 கி.மீ. தொலைவு பாயும் திறன் கொண்ட கலாம் ரக ஏவுகணைகள் பொருத்தப்படும்.

நீர்மூழ்கியில் இருந்து அணு ஆயுத தாக்குதல் நடத்தும் திறன் பாகிஸ்தானுக்கு கிடையாது. சீன கடற்படையால் நீர்மூழ்கியில் இருந்து அணு ஆயுத தாக்குதலை நடத்த முடியும். ஆனால் இந்தியாவோடு ஒப்பிடும்போது சீன கடற்படை மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருக்கிறது. தற்போது ஐஎன்எஸ் அரிகாட் நீர்மூழ்கியில் இருந்து ஏவப்பட்ட கலாம் 4 ஏவுகணை சீனாவுக்கு சவால் விடுக்கும் வகையில் அமைந்துள்ளது.

போர் காலங்களில் வான்இ தரை வழியாக நடத்தப்படும் அணு ஆயுத தாக்குதலை முறியடிக்க எதிரி நாடுகள் முயற்சி மேற்கொள்ளக்கூடும். ஆனால் கடலுக்கு அடியில் முகாமிட்டிருக்கும் நீர்மூழ்கியில் இருந்து நடத்தப்படும் அணு ஆயுத தாக்குதலை தடுத்து நிறுத்துவது கடினம்' என்று இந்திய கடற்படை வட்டாரங்கள் தெரிவித்தன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதி பசார் அல் அசாத்தின் ஆட்சி...

2024-12-08 10:31:49
news-image

சிரிய தலைநகர் டமஸ்கஸ் கிளர்ச்சியாளர்களின் வசம்

2024-12-08 10:14:41
news-image

சிரிய ஜனாதிபதி நாட்டிலிருந்து தப்பி வெளியேறினார்

2024-12-08 10:16:43
news-image

சிரியாவில் கிளர்ச்சிப் படையால் பதற்றம்: இந்தியர்கள்...

2024-12-08 09:58:09
news-image

சிரியாவின் மூன்றாவது பெரிய நகரம் ஹோம்ஸ்-...

2024-12-08 07:10:38
news-image

தென்கொரிய ஜனாதிபதிக்கு எதிரான அரசியல் குற்றவியல்...

2024-12-07 20:03:47
news-image

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் டிரம்ப் வெற்றிபெற...

2024-12-07 17:21:55
news-image

மீண்டுவரும் லெபனான் : பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்...

2024-12-07 13:32:04
news-image

காசாமருத்துவமனைக்குள் புகுந்து இஸ்ரேலிய படையினர் வெறியாட்டம்...

2024-12-06 20:03:34
news-image

காசாமருத்துவமனைக்குள் புகுந்து இஸ்ரேலிய படையினர் வெறியாட்டம்...

2024-12-06 20:03:33
news-image

கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் எதிர்தரப்பு...

2024-12-06 16:03:03
news-image

மருத்துவர்கள் போல உடையணிந்து மருத்துவமனைக்குள் நுழைந்த...

2024-12-06 14:06:38