ஹோமாகம வைத்தியசாலை வீதிப் பகுதியிலுள்ள வீடொன்றில் கடந்த 14ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் இரு சந்தேகநபர்கள் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேல்மாகாண தெற்கு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொலை முயற்சி, பலத்த காயம் விளைவித்தமை ஆகிய குற்றச்சாட்டுகள் தொடர்பிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 23 மற்றும் 26 வயதுடையவர்கள் எனவும், அவர்கள் கொழும்பு மற்றும் மீகொட பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, வெளிநாட்டில் மறைந்திருந்த போதைப்பொருள் வியாபாரி ஒருவரின் அறிவுறுத்தலின் பேரில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.
மேற்படி போதைப்பொருள் கடத்தல்காரர் வழங்கிய தகவலின் அடிப்படையில் தற்போது சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நபரின் குடும்பஸ்தர் ஒருவரைக் கொலைசெய்யும் திட்டத்தைச் செயல்படுத்தும் நோக்கில் சந்தேக நபர்கள் மோட்டார் சைக்கிளில் பயணித்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்கள் குற்றச்செயல்களுக்கு பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல் மாகாண தெற்கு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM