(நெவில் அன்தனி)
தென் ஆபிரிக்காவுக்கு எதிராக டேர்பன், கிங்ஸ்மீட் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பதிலுக்கு முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 13.5 ஓவர்களில் சகல விக்கெட்ளையும் இழந்து 42 ஓட்டங்களுக்கு சுருண்டது.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஓர் இன்னிங்ஸில் இலங்கை பெற்ற மிகக் குறைந்த மொத்த எண்ணிக்கை இதுவாகும்.
இலங்கை அணியில் கமிந்து மெண்டிஸ் (13), லஹிரு குமார (10) ஆகிய இருவரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.
தினேஷ் சந்திமால், குசல் மெண்டிஸ், ப்ரபாத் ஜயசூரிய, விஷ்வா பெர்னாண்டோ ஆகியோர் ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்தனர்.
தென் ஆபிரிக்க வேகப்பந்துவீச்சாளர் மார்க்கோ ஜென்சன் ஒரு ஓட்டமற்ற ஓவர் உட்பட 6.5 ஓவர்களில் 13 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
தனது 14ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஜென்சன், ஓர் இன்னிங்ஸில் பதிவு செய்த அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதி இதுவாகும்.
அவரை விட ஜெரால்ட் கொயெட்ஸி 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கெகிசொ ரபாடா 10 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா முதல் இன்னிங்ஸில் 191 ஓட்டங்களைப் பெற்றது.
தென் ஆபிரிக்கா தற்போது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM