(எம்.மனோசித்ரா)
சீரற்ற காலநிலையால் நாடளாவிய ரீதியில் 4 இலட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் முப்படையினர் மற்றும் பொலிஸார் தொடர்ந்தும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 2723 பாதுகாப்பு படையினர் மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை 105 இராணுவ படகுகளும், 107 கடற்படை படகுகளும், 20 விமானப்படை படகுகளும் மற்றும் 7 பொலிஸ் படகுகளும் மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 80 இராணுவ குழுக்கள் மற்றும் 130 கடற்படை குழுக்கள் இப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை விமானப்படையின் 6 உலங்கு வானூர்திகளும், இராணுவத்தின் 64 கனரக வாகனங்களும், 40 டிரக்டர்களும் மீட்பு மற்றும் நிவாரணம் வழங்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளன.
2080 இராணு வீரர்கள், 520 கடற்படை வீரர்கள், 80 விமானப்படை வீரர்கள் மற்றும் 43 பொலிஸார் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளில் ஈடுபட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM