எம்மில் பலரும் நாளாந்தம் அலுவலகம், விற்பனை நிலையம், தொழிற்சாலை என பல இடங்களுக்குச் சென்று கடுமையாக உழைத்து பொருளீட்டி குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்கு தங்களின் கடமையை செய்கிறார்கள். ஆனால் அவர்களின் எதிர்பார்ப்பு என்பது அதிகமாகவே இருக்கிறது.
சிலருக்கு அவர்களின் குறைந்தபட்ச எதிர்பார்ப்பு நிறைவேறாத தருணத்தில் விரக்தி அடைந்து நடை பிணமாக தங்களது வாழ்நாளை கழிக்கிறார்கள். ஆனால் சிலர் மட்டும் தங்களது வாழ்க்கையை தாராளமான பண வரவால் மகிழ்ச்சியுடன் கடத்துகிறார்கள்.
அதாவது சிலருக்கு மட்டுமே கோடீஸ்வர யோகம் கிடைக்கப்பெற்று, அவர்கள் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாகவே வாழ்கிறார்கள். இத்தகைய கோடீஸ்வர யோகம் அனைவருக்கும் கிடைப்பதற்கு எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் பல சூட்சமமான வழிமுறைகளை குறிப்பிட்டிருக்கிறார்கள்.
எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் சுட்டிக்காட்டும் சூட்சமமான வழிமுறையை நாம் நம்பிக்கையுடன் பின்பற்றினால் எமக்கும் வாழ்க்கையில் கோடீஸ்வர யோகம் கிட்டும் என்பது உறுதி. அது என்ன? என்பதை தொடர்ந்து காண்போம்.
கார்த்திகை மாதம் என்பது சிவபெருமானின் வழிபாட்டிற்கு உரிய மாதம். இந்த மாதத்தில் தான் சிவபெருமான் ஜோதி ரூபமாக காட்சி அளித்தார். அதனால்தான் தமிழ் மாதங்களில் கார்த்திகை மாதத்தில் அருகில் இருக்கும் சிவாலயத்திற்கு சென்று சிவபெருமானை தரிசித்தால் புண்ணியம் அதிகம் கிடைப்பதுடன் கோடீஸ்வர யோகமும் கிடைக்கும். இதற்காக சில பொருட்களை சிவாலயத்திற்கு நீங்கள் தானமாக வழங்க வேண்டும்.
அதாவது சிவாலயத்தில் வருகை தரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கும் திருநீற்றை நீங்கள் ஆலயத்திற்கு தானமாக தர வேண்டும். இது உங்களுடைய பொருளாதார சக்திக்கு ஏற்ற அளவில் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
இதைத்தொடர்ந்து ஏழை பக்தர்கள் சிவாலயத்திற்கு வருகை தந்து விளக்கு ஏற்றி வழிபடுவதற்கு வசதியாக ஏதேனும் ஒரு நாளை தெரிவு செய்து அந்த நாளில் 108 அகல் விளக்குகளை ஆலய நிர்வாகத்தினருக்கு தானமாக வாங்கித் தாருங்கள். இதனால் ஏழை பக்தர்கள் அந்த அகல் விளக்கில் நெய் அல்லது நல்லெண்ணையை ஊற்றி தீபமேற்றி வழிபடுவார்கள். இதனால் உங்களுக்கும் புண்ணியம் சேரும்.
அதேபோல் கார்த்திகை மாதத்தில் ஏதேனும் ஒரு நாளை தெரிவு செய்து அது உங்களுடைய விடுமுறை நாளாக இருந்தாலும் அல்லது விடுப்பு எடுக்கும் நாளாக இருந்தாலும் தெரிவு செய்து அந்த நாள் முழுவதும் அருகில் இருக்கும் சிவாலயத்திற்கு சென்று ஆலயத்தில் உழவாரப் பணியை மேற்கொள்ள வேண்டும்.
கார்த்திகை மாதம் என்றாலே ஜோதி ரூபம் என்பதால் இந்த மாதம் முழுவதும் உங்களது வீடுகளிலும், அருகில் இருக்கும் சிவாலயத்திலும் நாளாந்தம் ஒரே ஒரு தீபத்தை ஏற்றி சிவபெருமானை மனதில் தியானித்து வழிபட வேண்டும். இதுவும் உங்களுக்கு புண்ணிய பலன்களை அள்ளித் தரும்.
அருகில் இருக்கும் சிவாலயத்திற்கு சென்று, அங்கு மாதம் ஒரு முறையாவது சிவபெருமானுக்கு சங்காபிஷேகம் நடைபெறுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பின்னர் அந்த அபிஷேகத்திற்குரிய சங்கினை ஆலய நிர்வாகத்தின் அனுமதியுடன் ஆன்மீக பொருட்கள் விற்பனை நிலையத்திற்குச் சென்று அவர்கள் விரும்பும் அளவில் வாங்கி ஆலயத்திற்கு தானமாக வழங்க வேண்டும். நீங்கள் தானமாக வழங்கிய சங்கு மூலம் சிவபெருமானுக்கு அபிஷேகம் நடைபெறும் போது உங்களுக்கு புண்ணியம் சேரும்.
அதே தருணத்தில் கார்த்திகை மாதம் புண்ணிய மாதம் என்பதால் இந்த மாதத்தில் வரும் திங்கட்கிழமை அல்லது ஏதேனும் ஒரு கிழமையை தெரிவு செய்து அருகில் இருக்கும் சிவாலயத்திற்கு சென்று அன்று சிவபெருமானுக்கு நைவேத்தியம் படைப்பார்கள். அதில் ஏதேனும் ஒரு வேளை நைவேத்தியத்தை தயாரிப்பதற்கான பொருட்களை தானமாக வாங்கி தாருங்கள். இதுவும் உங்களது புண்ணியத்தின் எடையை அதிகரித்து கோடீஸ்வர யோகத்தை வழங்கும்.
தொடர்ந்து அருகில் இருக்கும் சிவாலயத்திற்காக தானம் செய்தாலும் உங்களுடைய வீட்டில் இருக்கும் பூஜை அறையில் செவ்வாய் - வெள்ளி- அமாவாசை -பௌர்ணமி - ஆகிய தினங்களில் நெல்லிக்காய் தீபத்தை ஏற்றுங்கள். இதற்காக சந்தைக்கு சென்று பெரிய அளவிலான நெல்லிக்காய் ஒன்றினை வாங்கி வந்து அதனை சுத்தப்படுத்தி இரண்டாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள்.
மேலே சொல்லப்பட்ட தினத்தில் அதிகாலை தருணத்தில் நெல்லிக்காய் மீது சிவப்பு வண்ண திரியை வைத்து தீபம் ஏற்றுங்கள். பொதுவாக இத்தகைய தீபங்கள் குறைவான கால அளவில் தான் ஒளியை உமிழும். இரண்டு நிமிட முதல் ஐந்து நிமிடம் வரை தீபம் ஒளிர்ந்தால் போதுமானது. இவை உங்களுக்கு கோடீஸ்வர யோகத்தை சூட்சமமாக வழங்கும் ஆற்றல் படைத்தவை.
மேலே சொல்லப்பட்ட எளிமையான வழிமுறைகளை நம்பிக்கையுடன் பின்பற்றினால் உங்களுடைய வாழ்க்கைத் தரம் உயர்வதுடன் இதற்கு மூல காரணமாக இருக்கும் தன வரவு அதிகரிக்கும். உங்களுக்கு கோடீஸ்வர யோகம் கிட்டும். உங்களது தலைமுறை சிறக்கும்.
தொகுப்பு : சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM