இன்றைய திகதியில் எம்மில் பலரும் சொரியாசிஸ் எனும் தோல் பாதிப்பிற்கு ஆளாகிறார்கள். இதற்காக ஆயுள் முழுவதும் பிரத்யேக மருந்தியல் சிகிச்சையை மேற்கொள்வதுடன், தனித்துவமான உணவு முறையையும் பின்பற்ற வேண்டியதிருக்கிறது. இந்நிலையில் வைத்தியர்கள் நவீன ஒளிக்கதிர் சிகிச்சை (போட்டோ தெரபி) எனும் சிகிச்சை மூலம் இதற்கு நிவாரணம் வழங்க இயலும் என தெரிவித்திருக்கிறார்கள்.
எம்மில் பலரும் தோலில் ஏற்படும் தோல் தடிப்பு அழற்சி (சொரியாசிஸ்), வெண்புள்ளி, அடோபிக் டெர்மடிடிஸ், பிட்ரியாசிஸ் ரோசியா, லிச்சென் பிளானஸ், கட்னியஸ் டி- செல் லிம்போமா, நாட்பட்ட தோல் அரிப்பு பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு தோல் பாதிப்புகளுக்கு ஆளாக கூடும்.
மேலும் இத்தகைய பாதிப்பு ஆறு வயது முதல் அறுபது வயது வரை உள்ள ஆண், பெண் என இரு பாலாருக்கும் ஏற்படக்கூடும்.
பலர் இதற்காக சிகிச்சை பெற்றாலும் சிகிச்சையை இடைநிறுத்தம் செய்தாலோ அல்லது சிகிச்சையின் போது பரிந்துரைக்கப்பட்டிருக்கும் உணவு முறையில் மாற்றத்தை ஏற்படுத்தினாலோ மீண்டும் இத்தகைய பாதிப்பு உண்டாகும். இந்நிலையில் இத்தகைய பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும் வகையில் நவீன கணினி உதவியுடன் கூடிய ஒளிக்கதிர் சிகிச்சை எனும் சிகிச்சை முறை அறிமுகமாகி இருக்கிறது.
இத்தகைய சிகிச்சை முறை மூலம் அல்ட்ரா வயலட் கதிர்களை உடல் முழுவதும் செலுத்தி நிவாரணம் வழங்குவார்கள். இத்தகைய சிகிச்சையை மேற்கொள்பவர்களுக்கு பக்க விளைவு மிகவும் குறைவு என்பதுடன் விரைவாகவும் நிவாரணம் கிடைக்கிறது.
தோலில் ஏற்படும் கோளாறுகளை சீரமைப்பதற்காக ஒளியை பயன்படுத்தி சிகிச்சை அளிக்கும் முறை தான் போட்டோ தெரபி ஆகும். இத்தகைய நவீன ஒளிக்கதிர் சிகிச்சை மூலம் முழுமையான நிவாரணம் பெறுபவர்களுக்கு மீண்டும் இத்தகைய பாதிப்பு ஏற்படுவது குறைவு என்றும் வைத்தியர்கள் தெரிவிக்கிறார்கள்.
வைத்தியர் ராஜ்குமார்
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM