(ஆர்.ராம்)

Image result for டி.எம்.சுவா­மி­நாதன் virakesari

கேப்­பா­ப்பு­லவு இரா­ணுவ முகாமை மாற்­று­வ­தற்­காக இரா­ணுவம் கோரிய 5மில்­லியன் ரூபா நிதியை பாது­காப்பு அமைச்­சிடம் கைய­ளித்­துள்­ள­தாக சிறைச்­சா­லைகள் மறு­சீ­ர­மைப்பு, மீள்­கு­டி­யேற்றம், புனர்­வாழ்­வ­ளிப்பு மற்றும் இந்து சமய அலு­வ­வல்கள் அமைச்சர் டி.எம்.சுவா­மி­நாதன் தெரி­வித்தார்.

அத்­துடன் வடக்கில் ஏனைய காணிகள் விடு­விப்பு தொடர்பில் விரைவில் பாது­காப்பு இரா­ஜங்க அமைச்சர் ருவான் விஜே­வர்த்­த­னவை சந்­திக்­க­வுள்­ள­தா­கவும் அமைச்சர் குறிப்­பிட்டார்.

இந்த விடயம் சம்­பந்­த­மாக அமைச்சர் சுவா­மி­நாதன் மேலும் தெரி­விக்­கையில்,

வடக்கு கிழக்கில் உள்ள காணி­களை விடு­விப்­பது குறித்து கடந்த ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி பாது­காப்பு அமைச்சில் விசேட கூட்டம் நடை­பெற்­றது. இதன்­போது வடக்கு கிழக்கில் பாது­காப்புத் தரப்­பி­ன­ரி­டத்தில் உள்ள காணி­களை விடு­விப்­பது குறித்து தமிழ்த்  தேசியக் கூட்­ட­மைப்பின் வடக்கு கிழக்கு உறுப்­பி­னர்கள் கோரிக்­கை­களை முன்­வைத்­தி­ருந்­தனர்.

குறிப்­பாக முள்­ளிக்­கு­ளத்தில் உள்ள கடற்­படை முகாமை அகற்­று­வது குறித்து கலந்­து­ரை­யா­டப்­பட்டு அதன் பிர­காரம் அந்த முகாம் அமைந்­துள்ள காணிகள் ஏப்ரல் 29ஆம் திகதி மக்­க­ளி­டத்தில் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளன. 

அதே­நேரம் குறித்த கூட்­டத்­தின்­போது கேப்­பா­பி­லவில் 190ஏக்கர் பொது­மக்­க­ளுக்குச் சொந்­த­மான காணி­களை விடு­விப்­பது குறித்து பிரஸ்­தா­பிக்­கப்­பட்­டது. அங்கு நடை­பெறும் மக்­களின் போராட்­டங்கள் குறித்தும் கூறப்­பட்­டது. 

அதன்­போது தாம் வேறொரு இடத்­திற்கு செல்­வ­தனால் அதற்கு நிதி தேவை­யா­க­வுள்­ளது. தமது முகாமை அகற்றி மாற்­றி­டத்தில் அமைப்­ப­தற்கு 5மில்­லி­யன்கள் வழங்­கப்­ப­ட­வேண்டும். அவ்­வாறு வழங்­கப்­ப­டு­மி­டத்து ஆறு வாரங்­களில் தாங்கள் அவ்­வி­டத்தை மீளக் கைய­ளிப்­ப­தற்கு தயா­ராக இருக்­கின்றோம் எனக் குறிப்­பிட்­டார்கள். 

இவ்­வா­றான நிலையில் எனது அமைச்­சினால் குறித்த இரா­ணுவ முகாமை மாற்­று­வ­தற்­காக 5 மில்­லியன் ரூபா நிதி­யா­னது பாது­காப்பு அமைச்­சி­டத்தில் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளது. ஆகவே நிச்­சயம் பாது­காப்பு தரப்­பினர் மாற்­றி­டத்­திற்கு முகாமைக் கொண்டு சென்று பொது­மக்­க­ளுக்குச் சொந்­த­மான காணி­களை விட­டு­விப்­பார்கள்.

அதே­நேரம் ஏனைய பகுதிகளில் உள்ள காணிகள் விடுவிப்பு குறித்து மீண்டும் இராஜங்க அமைச்சர் ருவான் விஜேவர்தனவை சந்திக்கவுள்ளேன். ஆவரிடத்தில் அக்காணிகள்  விடுவிப்பு அதற்கான காலப்பகுதி என்பன தொடர்பில் கலந்துரையாவுள்ளேன் என்றார்.