நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளும் இயக்குநருமான ஐஸ்வர்யாவுக்கும், நடிகர் தனுஷுக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 2004-ம் ஆண்டு நவம்பர் 18ம் திகதி சென்னையில் திருமணம் நடந்தது. இவர்களுக்கு லிங்கா, யாத்ரா என இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் சுமார் 18 ஆண்டுகள் திருமண வாழ்வுக்குப் பின்னர், கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த சில ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இது குறித்து இரண்டு ஆண்டுகளுக்கு முன் ட்விட்டரில் இருவரும் அதிகாரப்பூர்வமாக பதிவிட்டிருந்தனர்.
இருவருக்கும் சமாதானம் செய்து வைக்க குடும்பத்தினரும் நட்பு வட்டாரத்தினரும் முனைந்தபோதும் மணமுறிவு பெறுவதில் இருவரும் தீவிரம் காட்டியதால் முடிவுகள் சாதகமாக அமையவில்லை என சொல்லப்பட்டது.
இருந்த போதிலும் தனுஷ்- ஐஸ்வர்யா தம்பதி தங்களுக்கு சட்டப்பூர்வமாக விவாகரத்து வேண்டும் என குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்கள்.
இந்த நிலையில், இரண்டு வழக்கிற்கு வருகை தராமல் இருந்த காரணத்தினால் ரசிகர்கள் இவர்கள் சேர்ந்து விடுவார்கள் என கருத்துக்களை பதிவு செய்து வந்தனர்.
இதனையடுத்து தனுஷ்- ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. அந்த தீர்ப்பில் தனுஷ்- ஐஸ்வர்யா இருவருக்கும் விவாகரத்து வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
6 மாதமாக இருவருக்கும் இடையேயான விவாகரத்து வழக்கான நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த நிலையில், இன்று இருவருக்கும் சட்டப்பூர்வமாக விவாகரத்து வழங்கியுள்ளது நீதிமன்றம்.
மேலும், தனுஷ்- ஐஸ்வர்யாவின் மகன்களான யாத்ராவும், லிங்காவும் பெற்றோர் மீது நல்ல புரிதலில் இருக்கிறார்கள். எனவே விவாகரத்து நடக்கும் பட்சத்தில் அவர்கள் தாயுடன் இருந்தாலும் தந்தை தனுஷை ஒட்டுமொத்தமாக ஒதுக்கிவிட மாட்டார்கள்.
தந்தையின் அரவணைப்பிலும் அவர்கள் வளர்வார்கள். முக்கியமாக தனுஷின் ஆலோசனையையும் அவர்கள் கேட்டு தங்களது வாழ்க்கையை வாழ்வார்கள். அத்துடன், தனுஷ் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் தவறாமல் இருவரும் கலந்து கொள்வார்கள். அதற்கு ஐஸ்வர்யாவும் முழு ஒத்துழைப்பு கொடுப்பார் என்று திரைத்துறையில் உள்ளவர்கள் கூறுகிறார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM