(நெவில் அன்தனி)
டேர்பன் கிங்ஸ்மீட் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் முதலாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆபிரிக்காவை 191 ஓட்டங்களுக்கு இலங்கை கட்டுப்படுத்தியது.
போட்டியின் இரண்டாம் நாளான இன்று காலை தனது முதல் இன்னிங்ஸை 4 விக்கெட் இழப்புக்கு 84 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த தென் ஆபிரிக்கா கடைசி 6 விக்கெட்களை 107 மேலதிக ஓட்டங்களுக்கு இழந்தது.
அணித் தலைவருக்கே உரிய பாணியில் பொறுமையுடன் துடுப்பெடுத்தாடிய டெம்பா பவுமா 117 பந்துகளை எதிர்கொண்டு 9 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 70 ஓட்டங்களைப் பெற்றார்.
அவரை விட கேஷவ் மஹாராஜ் (24) மாத்திரமே 20 ஓட்டங்களுக்கு மேல் பெற்றார்.
பந்துவீச்சில் அசித்த பெர்னாண்டோ 44 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் லஹிரு குமார 70 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ப்ரபாத் ஜயசூரிய 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் விஷ்வா பெர்னாண்டோ 35 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
தற்போது பகல் போசன இடைவெளை வழங்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM