தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையினால் பெருமளவான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் பல பிரதேசங்கள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளன.
பாதிக்கப்பட்ட மக்கள் இடைத்தங்கள் முகாம்களில் தஙகவைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் யாழ் மாவட்டத்தில் பல பிரதேசங்களில் பாதிக்கப்பட்ட மக்கள் இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.
இவர்களை கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டதுடன் அவர்களுக்கான உடனடி தேவைகளை ஏற்படுத்திக் கொடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.
அதே போன்று தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஸ்ரீபானந்தராஜா அவர்கள் இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களின் நலன்கருதி நடமாடும் மருத்துவ சேவைகளை ஒழுங்குப்படுத்தி நேரில் சென்று பார்வையிட்டு அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளையும் மேற்கொண்டு வருகின்றார். தற்போது முதல் கட்டமாக யாழ் இந்து மகளிர் கல்லூரியில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கான மருத்துவ சேவை வழங்கப்பட்டுவருகின்றது."
அதே வேளை தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி அவர்களும் இடைத்தங்கல் முகாங்களில் உள்ள மக்களை சந்தித்து மக்களுக்கான உலர் உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகின்றார்.
அதே போன்று வடமராட்சி பகுதியில் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் அவர்களும் களப்பணியில் நின்று மக்களுக்கு தேவையான உதவிகளை களத்தில் நின்று புரிந்து வருகின்றார் .
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM