தமிழ்நாடு சுற்றுலா விருதுகளில் ‘சிறந்த விமானப் பங்குதாரராக’ ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸுக்கு அங்கீகாரம்

Published By: Digital Desk 7

28 Nov, 2024 | 08:20 PM
image

தென்னிந்தியாவில் சுற்றுலா தளத்தை மேம்படுத்துவதில் விமான சேவையில் சிறந்த பங்களிப்பை அளித்த விமான சேவையாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் "சிறந்த விமான பங்குதாரர்" விருதை பெற்றுள்ளது. 2024 ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த விருது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.

செப்டம்பர் மாதம் நடைபெற்ற தெற்காசிய பயண விருதுகளில், பார்வையாளர்களின் தேர்வு மூலம் தேர்வர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

தெற்காசியாவின் சிறந்த முன்னணி சர்வதேச விமான நிறுவனமாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்த கடந்த சில மாதங்களில் ஸ்ரீலங்கன் நிறுவனம் பெரும் இரண்டாவது கெளரவத்தை இந்தப் பாராட்டு குறிக்கிறது

தமிழகத்தில் சென்னை, திருச்சி மற்றும் மதுரையில் கொழும்புக்கு இணைக்கும் கிட்டத்தட்ட 35 வாராந்திர விமானங்கள் மூலம், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம், மருத்துவ பயணங்கள், சுற்றுலா பயணங்கள், யாத்திரை பயணங்கள் உள்ளிட்டவற்றை ஆதரிக்கும் முன்னணி சர்வதேச விமான நிறுவனங்களில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தொடர்ந்து நிலை நிறுத்திக் கொண்டு வருகிறது.

தமிழகம் மட்டுமின்றி டெல்லி, மும்பை, ஹைதராபாத், பெங்களூரு, கொச்சின் மற்றும் திருவனந்தபுரம் ஆகிய நகரங்களில் இந்தியா முழுவதும் 90 வாராந்திர விமானங்களை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் இயக்கி வருகிறது. தமிழ்நாடு சுற்றுலா விருதுகள் மாநிலத்தின் சுற்றுலாத்துறையில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்திய விமான நிறுவனமாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் கொண்டாடப்படுகிறது.

இந்த விருது குறித்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் உலகளாவிய விற்பனை மற்றும் விநியோக தலைவராக உள்ள திமுத்து தென்னகோன் கூறுகையில், தமிழ்நாடு சுற்றுலா விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் தங்கள் நிறுவனம் "சிறந்த விமான பங்குதாரர்" என்ற விருதை பெறுவதில் மிகவும் பெருமை அடைவதாக கூறினார்.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு கிடைத்த இந்த அங்கீகாரம், விமான சேவை மற்றும் சுற்றுலாத்துறையில் சிறந்து விளங்குவதற்கான எங்களின் அசைக்க முடியாத செயல்பாட்டை மேலும் மேலும் உறுதிப்படுத்துகிறது என்றும் தெரிவித்தார்.

தற்போது பெற்றுள்ள இந்த விருதின் மூலம் தமிழ்நாட்டில் தங்களது விமான சேவையை தொடர்ந்து அளிப்பது மட்டுமல்லாமல் மேலும் பல வழித்தடத்துக்கும் அதிகரிக்கவும் தங்களுக்கு ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது என்றும் கூறினார்.

இந்த விருது குறித்து, சென்னையில் உள்ள ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விற்பனை நிர்வாகிகள்  கசூன் வெளர்த்தேன் கூறுகையில், தமிழகத்தில் விமான சேவை செய்து வரும் முன்னணி விமான சேவை நிறுவனங்களில் சிறந்த விமான சேவை நிறுவனமாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் அங்கீகரிக்கப்பட்டதில் தங்கள் நிறுவனம் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்து இருப்பதாக கூறினார்.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மீது வாடிக்கையாளர்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு இந்த விருது மேலும் ஒரு சான்றாக அமைந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இந்த விருது கிடைத்திருப்பது மூலம் எங்களது விமான சேவை பணிகளை மேம்படுத்துவதற்கு புதிய சக்தியாக இந்த விருது அமைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

தங்கள் நிறுவனத்தில் பயணிக்கும் பயணிகளின் திருப்தி மற்றும் விமான பயணங்களில் இணைப்புக்கு முக்கியத்துவம் அளித்து அனுபவத்தை இனிமையாக தங்கள் பயணிகளுக்கான பயண அனுபவத்தை மேலும் மேம்படுத்துவதை விமான நிறுவனம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெற்காசியாவிலேயே மிகவும் அலங்கரிக்கப்பட்ட விமான சேவை நிறுவனங்களில் ஒன்றாக தொடர்வதால் தங்களுக்கு கிடைத்துள்ள இந்த பாராட்டு மூலம், தெற்காசியாவின் மற்ற பகுதிகளிலும் சுற்றுலா மேம்படுத்துவதில் மேலும் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்று நினைவூட்டுகிறது என்றும் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் புரட்சிகரமான Ather 450X மின்சார...

2024-12-08 15:35:45
news-image

காலநிலை மாற்றங்களை எதிர்கொள்ளல்

2024-12-08 13:27:59
news-image

“சுதந்திர சிந்தனைகள்” ஜனசக்தி லைஃப் இன்...

2024-12-08 12:40:08
news-image

ஹேமாஸ் மருத்துவமனை 3D Laparoscopic சிறுநீரக...

2024-12-08 10:22:54
news-image

கால் நூற்றாண்டு கால முன்னேற்றம் Rafflesஇன்...

2024-12-08 10:23:42
news-image

இலங்கையை ஃபோர்மியுலா 1 க்கு கொண்டு...

2024-12-08 09:43:38
news-image

புதுப்பொலிவு பெறும் இணையத்தளத்துடன் செயற்பாட்டுக்கு வரும்...

2024-12-07 13:33:25
news-image

நிதி ஸ்திரத் தன்மைக்கான கடன் ஆரோக்கியம்/மதிப்பீடுகளின்...

2024-12-03 18:40:55
news-image

Kedalla Art of Living 2024...

2024-12-03 18:39:19
news-image

தமிழ்நாடு சுற்றுலா விருதுகளில் ‘சிறந்த விமானப்...

2024-11-28 20:20:14
news-image

2024 / 2025ஆம் நிதியாண்டின் முதல்...

2024-11-26 18:06:14
news-image

வளர்ச்சி மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றில் 127...

2024-11-26 17:24:26