நிலவும் சீரற்ற காலநிலையால் நுவரெலியா – கண்டி பிரதான வீதியின் லபுக்கலை குடாஓயா பகுதியில் வியாழக்கிழமை (27) இரவு மண்மேட்டுடன் கற்கள் சரிந்து வீழ்ந்ததில் குறித்த வீதியில் போக்குவரத்து ஒருவழியாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
மண்மேட்டுடன் கற்கள் சரிந்து வீழ்ந்ததில் நுவரெலியா ,கண்டி ,கொழும்பு வழியூடான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
எனினும் நீண்ட நேர சிரமத்தின் பின்னர் நுவரெலியா போக்குவரத்து பொலிஸார் , நுவரெலியா வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் இணைந்து மண்மேட்டையும் கற்களையும் அகற்றி இவ்வீதியின் போக்குவரத்தை வழமைக்குக் கொண்டு வந்துள்ளனர்.
எவ்வாறாயினும் தற்போது குறித்த வீதியின் ஒரு மருங்கில் மாத்திரம் போக்குவரத்து இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நுவரெலியா கண்டி பிரதான வீதியில் பல இடங்களில் தொடர்ந்து மண்சரிவு ஏற்படுவதற்கான வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதால் இவ் வீதியில் பயணிக்கும் வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் மிகுந்த அவதானத்துடன் பயனிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM