கண்டி- மாத்தளை பிரதான வீதியில்  மஹய்யாவை பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சிறிய ரக வேன் ஒன்றும் பஸ் வண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 23 வயதுடைய எம்.எஸ்.எம். அஸார்தீன் என்ற இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் நால்வர்  கடும் காயங்களுக்கு உள்ளாகி கண்டி வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

வெளிநாட்டில்  பணி புரிந்து நாடு திரும்பிய உறவினர் ஒருவரை விமான நிலையத்திலிருந்து அழைத்து வருவதற்கு விமான நிலையம் நோக்கி  சென்ற வேன் ஒன்றே மேற்படி விபத்தில் சிக்கியுள்ளது.

கண்டி மாவில்மடை பிரதேசத்தில் இருந்து  சென்ற வேன் கொழும்பிலிருந்து  மாத்தளை நோக்கி வந்த சொகுசு பஸ் வண்டியின் மீது, கண்டி மஹய்யாவை பிரதேசத்தில் வைத்து மோதியுள்ளது.

இதேவேளை கைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நால்வரில் வேனின் சாரதி கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ் விபத்து தொடர்பில் பஸ் வண்டியின் சாரதியை கட்டுகஸ்தோட்டை பொலிஸார்  கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.