நடிகர் ஆரிக்கு 2016 ஆம் ஆண்டின் துவக்கமே மிக பிரகாசமாய் இருக்கிறது. ஒரு  பாரம்பரியம் உள்ள தயாரிப்பு  நிறுவனம் தயாரிக்கும் படத்தில் கதாநாயகனாக நடிக்கும் பெருமை பேச்சில் தெரிகின்றது.

' என் மகிழ்ச்சியை சொல்லில் சொல்லி அளவிட முடியாது. அபிராமி திரை அரங்குகளின் உரிமையாளர் ராமநாதன் சாரிடம் இருந்து அழைப்பு வந்தவுடன் சற்று பதற்றமாய் தான் இருந்தது. ஆனால் அது அவர் படத்தில் நடிக்க சொல்லி என்பதை தெரிந்துக் கொண்டவுடன் என் உற்சாகத்துக்கு அளவே இல்லை. வளரும் நடிகனான எனக்கு அவரது தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து நடிக்க அழைப்பு வந்து இருப்பதில் மிக மிக பெருமை. 'உன்னோடு கா' என்று தலைப்பிட்டு உள்ள இந்தப் படத்தில் நான் பிரபு சாருடன் இணைந்து நடிப்பது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது.  

நகைச்சுவை கலந்த காதல் கதையான 'உன்னோடு கா' படத்தில் எனக்கு இணையாக  நடிக்கும் நடிகையின் தேர்வு நடைப்பெற்றுக் கொண்டு இருக்கிறது.

திறமையான புதிய இயக்குனர் ஆர்.கே, சென்னை 28, மங்காத்தா ஆகிய படங்களின் ஒளிப்பதிவை ஆற்றிய சக்தி சரவணன், 'எங்கேயும் எப்போதும்' படத்தின் இசை அமைப்பாளர் சத்யா, என்று ஒரு திறமையான தொழில் நுட்பக் கலைஞர்களோடு இந்தப் படத்தில் இணைந்து இருப்பது 'உன்னோடு கா' படத்தின் மேல் ஏறும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தும்.

பிரபு சாருடன் ஊர்வசி மேடமும் இணைந்து நடிப்பது 'உன்னோடு கா' படத்தின் பலத்தை கூட்டும். மனோ பாலா சார், மன்சூர் அலி கான், என்று ரசிகர்களை மகிழ்விக்கும் ஒரு பெரிய பட்டியலே இருக்கிறது. ந்த மாதம் இறுதியில் 'உன்னோடு கா' படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளது. முழுக்கு முழுக்க ஜனரஞ்சகமாக,குடும்பத்தோடு வந்து இசிக்க கூடியப் படமாக இருக்கும் 'உன்னோடு கா' என்கிறார் உற்சாகத்துடன் ஆரி.

தகவல் : சென்னை அலுவலகம்