(நெவில் அன்தனி)
இலங்கை - தென் ஆபிரிக்க அணிகளுக்கு இடையில் டேர்பன், கிங்ஸ்மீட் விளையாட்டரங்கில் இன்று புதன்கிழமை (27) ஆரம்பமான முதலாவது ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் போட்டியின் முதல் நாள் ஆட்டம் தொடர் மழை காரணமாக 20.4 ஓவர்களுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட தென் ஆபிரிக்கா பகல் போசன இடைவேளைக்கு சற்று முன்னர் மழையினால் ஆட்டம் தடைப்பட்டபோது அதன் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்களை இழந்து 80 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
ஏய்டன் மார்க்ராம் (9), டோனி டி ஸோர்ஸி (4) ஆகிய இரண்டு ஆரம்ப வீரர்களும் ஸ்லிப் நிலையில் பிடிகொடுத்து ஆட்டம் இழந்தனர்.
அசித்த பெர்னாண்டோவின் பந்துவீச்சில் மார்க்ராமின் பிடியை ஏஞ்சலோ மெத்யூஸும் விஷ்வா பெர்னாண்டோவின் பந்துவீச்சில் டி ஸோர்ஸியின் பிடியை கமிந்த மெண்டிஸும் எடுத்தனர்.
தொடர்ந்து ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ் (16), அணித் தலைவர் டெம்பா பவுமா ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 32 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது ஸ்டப்ஸ் ஆட்டம் இழந்தார்.
லஹிரு குமாரவின் பந்துவீச்சில் ஸ்லிப் நிலையில் திமுத் கருணாவிடம் ஸ்டப்ஸ் பிடிகொடுத்தார். (46 - 3)
மொத்த எண்ணிக்கை 54 ஓட்டங்களாக இருந்தபோது லஹிர குமாவின் பந்துவீச்சில் டேவிட் பெடிங்ஹாம் (4) போல்ட் ஆனார்.
இதனிடையே ஏஞ்சலோ மெத்யூஸ் மிகத் துல்லியமாக இரண்டு ஓட்டமற்ற ஓவர்களை வீசினார்.
பகல் போசன இடைவேளைக்குப் பின்னர் மழை தொடர்ந்து பெய்ததால் பிற்பகல் 3.00 மணியளவில் முதல் நாள் ஆட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்படுவதாக மத்தியஸ்தர்கள் அறிவித்தனர்.
ஆட்டும் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டபோது தென் ஆபிரிக்க அணித் தலைவர் டெம்பா பவுமா 28 ஓட்டங்களுடனும் கய்ல் வெரின் 9 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.
பந்துவீச்சில் லஹிரு குமார 35 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் விஷ்வா பெர்னாண்டோ 17 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் அசித்த பெர்னாண்டோ 22 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM