அறிமுக நடிகர் முரளி ராதாகிருஷ்ணன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'சைலண்ட்' எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தேசிய விருது பெற்ற இயக்குநர் சீனு ராமசாமி மற்றும் முன்னணி தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஆகிய அவர் இணைந்து வெளியிட்டனர்.
அறிமுக இயக்குநர் கணேஷா பாண்டி இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'சைலண்ட்' எனும் திரைப்படத்தில் முரளி ராதாகிருஷ்ணன், ஆராத்யா, நமீதா மாரிமுத்து, டி. சமய முரளி, 'அறம்' ராம்ஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
சேயோன் முத்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு டி .சமய முரளி மற்றும் கே. ரவி ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள்.
திருநங்கையின் வாழ்வியலை உணர்வுபூர்வமாக விவரிக்கும் இந்த திரைப்படத்தை எஸ் ஆர் ட்ரீம் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். ராம் பிரகாஷ் தயாரித்திருக்கிறார் இந்த திரைப்படத்தை எஸ் பி ஆர் மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் பி ராஜ சேதுபதி வழங்குகிறார்.
எதிர்வரும் 29 ஆம் திகதி முதல் பட மாளிகையில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இதன்போது படக்குழுவினருடன் இயக்குநர்கள் சீனு ராமசாமி- கணேஷ் கே. பாபு , தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஆகியோர் சிறப்பு அதிதிகளாக பங்கு பற்றினர்.
படத்தை பற்றி இயக்குநர் பேசுகையில், '' உடலால் ஆணாகவும், உடை உள்ளிட்ட நடவடிக்கையில் பெண்ணாகவும் தோற்றத்தை மாற்றிக் கொண்ட ஒரு கதாபாத்திரம் ..தன்னுடைய தாயை தான் கொன்றதாக காவல்துறையிடம் ஒப்புக்கொண்டு, சரண் அடைகிறான். இதன் பின்னணி என்ன? என்பதை விறுவிறுப்பாக சொல்லும் திரைப்படம் தான் 'சைலண்ட்'. சிறிய முதலீட்டில் உருவாகி இருந்தாலும் ரசிகர்களை எந்த வகையிலும் ஏமாற்றம் அளிக்காது '' என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM