முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியான மழை காரணமாக 1104 குடும்பங்களைச் சேர்ந்த 3374 பேர் பாதிப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.
தற்போது நிலவும் தொடர் மழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் குளங்களின் நீர்மட்டம் அதிகரித்து வான் பாயத் தொடங்கியுள்ளதுடன், இதனால் தாழ் நிலப் பகுதிகளிலும் வெள்ள நீர் தேங்கியுள்ளது.
இதன் காரணமாக மாந்தை கிழக்கு பிரதேச செயலகப் பிரிவில் 80 குடும்பங்களை சேர்ந்த 243 நபரும், கரைத்துரைப்பற்று பிரதேச செயலக பிரிவில் 73 குடும்பங்களை சேர்ந்த 229 நபரும், ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவில் 438 குடும்பங்களை சேர்ந்த 1537 பேரும், புதுக்குடியிருப்பு பிரதேச செயலகப் பிரிவில் 47 குடும்பங்களை சேர்ந்த 147 பேரும், துணுக்காய் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 263 குடும்பங்களை சேர்ந்த 759 பேரும், வெலிஓயா பிரதேச செயலாளர் பிரிவில் 203 குடும்பங்களை சேர்ந்த 459 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக இன்று (27) பிற்பகல் வெளியிடப்பட்ட மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீரற்ற வானிலை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் மீட்கப்பட்டதை தொடர்ந்து, ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவை சேர்ந்த மக்கள் ஒட்டுசுட்டான் கரிவேலன் கண்டல் அ.த.க. பாடசாலையிலும், கூழாமுறிப்பு பாடசாலையிலும், புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவை சேர்ந்த மக்கள் மன்னாகண்டல் அ.த.க பாடசாலையிலும் ஏனையவர்கள் உறவினர்கள் வீடுகளிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தொடரும் சீரற்ற வானிலை தொடர்பில் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும், இடர் ஏற்படும் சந்தர்ப்பத்தில் இடர் கிராம சேவையாளர் ஊடாக முகாமைத்துவப் பிரிவு, பொலிஸார், இராணுவத்தினரின் உதவியை பெறுமாறும் மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவு அறிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM