டேன் பிரியசாத் மற்றும் மஹிந்த கஹந்தகம உள்ளிட்ட மூவரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதிமன்றம் இன்று புதன்கிழமை (27) பிடியாணை பிறப்பித்துள்ளது.
கொழும்பு கோட்டை நீதவான் தனுஜா லக்மாலியினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
'அரகலய' எனும் பெயரில் காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில் சந்தேக நபர்களாக கருதப்படும் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட பலர் நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர்.
ஆனால் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேக நபர்களான டேன் பிரியசாத் மற்றும் மஹிந்த கஹந்தகம உள்ளிட்ட மூவர் நீதிமன்றில் ஆஜராகவில்லை.
இதன்போது சந்தேக நபர்கள் சார்பில் நீதிமன்றில் ஆஜரான சட்டத்தரணி, டேன் பிரியசாத் மற்றும் மஹிந்த கஹந்தகம உள்ளிட்ட மூவரும் தற்போது வெளிநாட்டில் இருப்பதாக நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, டேன் பிரியசாத் மற்றும் மஹிந்த கஹந்தகம உள்ளிட்ட மூவரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு எதிர்வரும் 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் 26ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM