சூறாவளி ஆபத்து - வானிலை அவதான நிலையம் கடும் எச்சரிக்கை

27 Nov, 2024 | 04:33 PM
image

வங்களாவிரிகுடாவின் தென்மேற்கில் நிலை கொண்டுள்ள தாழமுக்கம் இன்றுமாலை சூறாவளியாக மாறலாம் என வானிலை அவதான நிலையம்  தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக இன்று வடக்கு,வடமேற்கு , வடமத்திய மற்றும்  மத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் கேகாலையிலும் கடும் மழை பெய்யலாம் என வானிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது.

இதேவேளை வழமையாக வடகீழ் பருவக்காற்று காலங்களில் வங்காள விரிகுடாவில் தோன்றும் தாழமுக்கம் மற்றும் புயல்களின் நகர்வுப்பாதையை ஒரளவு தெளிவாக கணிக்க முடியும். 

ஆனால் இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் நகர்வுப்பாதையை தெளிவாக கணிக்க முடியவில்லை. அத்தோடு இதன் கரையைக் கடக்கும் இடம் இன்னமும் தெளிவாகவில்லை.

தற்போதைய நிலையின் படி இந்த புயல் வடக்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து எதிர்வரும் 30ம் திகதியளவில் சென்னைக்கும் கடலூருக்குமிடையில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் நகரும் பாதையும் கரையைக் கடக்கும் இடமும் மாற்றமடையலாம் என்பதனைக் கருத்தில் கொள்க. 

இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கிழக்கு மாகாணத்தின் திருகோணமலைக்கும் வடக்கு மாகாணத்தினுடைய அனைத்து மாவட்டங்களுக்கும் தற்போது கிடைத்து வருகின்ற மழை நாளை வரை தொடர்வதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன. ஆனால் முல்லைத்தீவுஇ யாழ்ப்பாணம்இ மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கு சற்று வேகமான காற்றுடன் மிகக் கன மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. 

மட்டக்களப்பு மற்றும் அம்பாறையை பொருத்தவரை இன்று முதல் மழை படிப்படியாக குறைவடையும் ஆனாலும் எதிர்வரும் 30.11.2024 வரை இடை இடையிடையே கனமழை கிடைப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன

தொடர்ச்சியாக கிடைத்த வருகின்ற கனமழை காரணமாகவும் குளங்களினுடைய மேலதிகமான உபரி நீர் வான் பாய்வதன் காரணமாகவும் வடக்கு(அனைத்து மாவட்டங்களும்)மற்றும் கிழக்கு மாகாணங்களின் உடைய பல பகுதிகளிலும்(முக்கியமாக மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை)வெள்ள  அனர்த்தத்திற்கான வாய்ப்புகள் மிக உயர்வாகவே காணப்படுகின்றன. என்ற தகவலும் வெளியாகியுள்ளது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்களுக்கான நன்மைகளை படிப்படியாக அழித்து வரும்...

2025-03-23 17:54:24
news-image

நாணய நிதியத்தின் தேவைக்காக தயாரிக்கப்பட்டுள்ள பட்ஜட்...

2025-03-23 16:42:49
news-image

ஜி.எஸ்.பி. பிளஸ் வரி சலுகையைப் பாதுகாக்க...

2025-03-23 16:34:05
news-image

காய்ச்சல் காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில்...

2025-03-23 21:51:48
news-image

ஏப்ரல் 28 இல் ஆய்வுக்காக இலங்கை...

2025-03-23 17:55:39
news-image

யோஷிதவுடன் இரவு விடுதிக்கு சென்றவர்கள் -பாதுகாப்பு...

2025-03-23 21:09:20
news-image

சகல தொழிற்சங்கங்களுடனும் இணைந்து தொழிற்சங்க நடவடிக்கையில்...

2025-03-23 17:49:19
news-image

சுகாதார துறையின் அபிவிருத்தி: ஐ.நா திட்ட...

2025-03-23 20:40:52
news-image

வீட்டிலிருந்து உணவு வழங்க அனுமதியுங்கள் -...

2025-03-23 20:01:41
news-image

பாராளுமன்றத்தால் தேசபந்துவை பதவி நீக்க முடியாது...

2025-03-23 19:46:55
news-image

ஏப்ரல் 8இல் அரச சொத்துக்களை மீட்பதற்கான...

2025-03-23 16:20:07
news-image

யாழ். பல்கலைக்கழகத்தில் தமிழ் துறையில் பட்டம்...

2025-03-23 18:17:22