தற்போது ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக தம்பலகாமம் பிரதேச செயலகத்துக்குட்பட்ட தாயிப் நகர் கோயிலடி வைத்தியசாலை வீதியின் ஒரு பகுதி உடைந்துள்ளதால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
எனவே இவ் வீதி ஊடாக பயணிப்பதை தவிர்த்து மாற்று வழி ஊடாக பொது மக்களை பயணிக்குமாறு தம்பலகாமம் பிரதேச செயலகம் பொது மக்களை கேட்டுள்ளது. கன மழை காரணமாக தம்பலகாமம் பகுதியில் உள்ள பல தாழ் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் மக்களின் இயல்பு நிலையும் பாதிக்கப்பட்டுள்ளது.
முள்ளியடி பகுதியில் விவசாய நிலங்கள் உட்பட மக்களின் குடியிருப்பு பகுதிகளிலும் நீர் புகுந்துள்ளதால் பல அசௌகரியங்களை எதிர் நோக்குவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
நீரில் மூழ்கியுள்ள பகுதிகளில் மேலதிக நீரை வெளியேற்ற பிரதேச செயலகம் ஊடாக மும்முரமாக பெகோ இயந்திரம் ஊடாக நடை முறைப்படுத்தி வருகின்றனர்.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் ஊடாக பல்வேறு நடவடிக்கைகளும் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM