இந்தோனேஷியக் கடற்கரையில் மர்மமான உயிரினமொன்றின் சடலம் அழுகிய நிலையில் கரை ஒதுங்கியுள்ளது.

ஹூலூ கடற்கரையில் ஒதுங்கியுள்ள இந்த சடலம் 15 மீற்றர் நீளத்துடன் 35 தொன் எடை கொண்டதாக இருப்பதாக அந்நாட்டு ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆனால், இது எந்தவகை உயிரினம் என்பது தெளிவாகத் தெரியவில்லை என அந்நாட்டு மக்கள்  குழம்பிப்போய் உள்ளனர்.

உயிரினத்தின் சடலம் கிடக்கும் சில மீற்றர் பரப்பளவில் கடல் நீர் சிவப்பு நிறமாக மாறியுள்ளது. இதுகுறித்து தகவலறிந்ததும் கடற்கரைக்கு சென்ற ஆராய்ச்சியாளர்கள், சடலத்தை ஆய்வு செய்துள்ளனர்.

இது பெரிய சிப்பி மீனாகவோ அல்லது பெரிய பற்களைக் கொண்ட திமிங்கிலமாகவோ இருக்க அதிக வாய்ப்பு இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேபோல், பிலிப்பைன்ஸ் நாட்டின் கடற்கரையிலும் அண்மையில் மர்மமான உயிரினத்தின் சடலம் கரை ஒதுங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.