மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் இன்று புதன்கிழமை (27) காலை வரை 15 ஆயிரத்து 205 குடும்பங்களைச் சேர்ந்த 52 ஆயிரத்து 487 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
அவர்களில் 1240 குடும்பங்களைச் சேர்ந்த 4 ஆயிரத்து 128 நபர்கள் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 43 தற்காலிக நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை மாவட்டத்தில் பாதிக்கப்பட்டு தற்காலிக நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களை பாதுகாப்பு பிரதி அமைச்சர் அநுர ஜெயசேகர தலைமையிலான குழுவினர் நேரடியாக சென்று பார்வையிட்டதோடு, அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய உதவிகளை முன்னெடுக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
இதன் போது பிரதேசச் செயலாளர் எம்.பிரதீப் உள்ளடங்களாக உரிய திணைக்கள அதிகாரிகளும் சென்றிருந்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM