உதை பந்தாட்டம், கூடைப்பந்தாட்டம், பனி சறுக்கு உள்ளிட்ட விளையாட்டுகளில் ஈடுபடும் வீரர்களின் பெரும்பான்மையானவர்களுக்கு முழங்கால் மூட்டு பகுதியில் எதிர்பாராவிதமாக காயம் ஏற்படக்கூடும்.
சிலருக்கு முழங்கால் மூட்டு பகுதியில் வீக்கமும், தாங்க இயலாத வலியும் உண்டாகும். இந்த தருணத்தில் வைத்தியர்கள் அவர்களுக்கு ஏ சி எல் இன்டர்னல் பிரேஸ் சர்ஜேரி எனும் பிரத்யேக சத்திர சிகிச்சையை மேற்கொண்டு நிவாரணம் வழங்குகிறார்கள்.
விளையாட்டு வீரர்கள் மைதானங்களில் விளையாடிக் கொண்டிருக்கும்போது எதிர்பாராத விதமாக அவர்களுடைய முழங்கால் மூட்டு பகுதியில் பாதிப்பு ஏற்படுகிறது.
இதன் காரணமாக தொடை எலும்பு பகுதியில் உள்ள வலுவான திசுக்களில் சேதம் அல்லது சிதைவு ஏற்படுகிறது.
இதுபோன்ற தருணங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக எக்ஸ்ரே, எம் ஆர் ஐ ஸ்கேன், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் போன்ற பரிசோதனைகள் மூலம் பாதிப்பின் தன்மை துல்லியமாக அவதானிக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து அவர்களுக்கு பாதிப்பின் தன்மையை பொறுத்து சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.
இது போன்ற தருணங்களில் விளையாட்டு வீரர்களுக்கு அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காமல் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்புவதற்காக ACL with Internal Brace Arthrex எனும் பிரத்யேக சத்திர சிகிச்சையை வைத்திய நிபுணர்கள் மேற்கொள்வார்கள்.
இத்தகைய சத்திர சிகிச்சையின் போது பாதிக்கப்பட்ட இடத்தின் வெளிப்புறத்தில் பிரத்யேக உறையை அணிவது போல்.. உள்புறத்திலும் பிரத்யேக முறையில் அந்நிய பொருளை வைத்து சத்திர சிகிச்சையை மேற்கொள்வார்கள்.
இதன் காரணமாக நோயாளிகள் விரைவில் குணமடைந்து தங்களின் இயல்பு நிலைக்குத் திரும்புவார்கள். இதனால் அவர்களுடைய முழங்கால் மூட்டுகளுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்படுகிறது. வெகு சிலருக்கு மட்டுமே இதனால் சிறிய அளவிலான பக்க விளைவுகள் ஏற்படக்கூடும்.
வைத்தியர் ராஜ் கண்ணா
தொகுப்பு அனுஷா
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM