'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி -சூரி- வெற்றிமாறன்- 'இசைஞானி' இளையராஜா கூட்டணியில் உருவான 'விடுதலை 2 'படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
இதனுடன் இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற 'மனசுல மனசுல..' எனத் தொடங்கும் இரண்டாவது பாடலும், பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது.
முத்திரை பதித்த படைப்பாளியான வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'விடுதலை 2 ' திரைப்படத்தில் விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், சூரி, கிஷோர், பவானி ஸ்ரீ, கௌதம் வாசுதேவ் மேனன் , ராஜீவ் மேனன், போஸ் வெங்கட் , வின்சென்ட் அசோகன், அனுராக் காஷ்யப், இளவரசு, பாலாஜி சக்திவேல், ஷரவணா சுப்பையா, தமிழ், சேத்தன், கென் கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஆர். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு 'இசை ஞானி' இளையராஜா இசையமைத்திருக்கிறார். ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஆர் எஸ் இன்ஃபோடெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தயாரித்திருக்கிறார்.
எதிர்வரும் டிசம்பர் மாதம் இருபதாம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியிட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இதில் படக் குழுவினருடன் 'இசைஞானி' இளையராஜா சிறப்பு அதிதியாக பங்கு பற்றினார்.
படத்தைப் பற்றி இயக்குநர் வெற்றிமாறன் பேசுகையில், '' இசைஞானி இளையராஜா உடன் பணியாற்றிய அனுபவம் மகிழ்ச்சியானதாகவும் , உணர்வுபூர்வமானதாகவும், வித்தியாசமானதாகவும் இருந்தது. அவருடன் இணைந்து பணியாற்றிய தருணங்கள் அபூர்வமானது என்பதால் அதனை காணொளியாக பதிவு செய்திருக்கிறேன்.
இது என்னுடைய திரையுலக பயணத்தில் கிடைத்த பொக்கிஷமாகும். முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் பல விடயங்கள் புதிதாக இருக்கும் என நம்புகிறேன்.
இந்த திரைப்படத்திற்காக விஜய் சேதுபதியிடம் எட்டு நாள் கால்ஷீட் வேண்டும் என்று கேட்டேன். ஆனால் அவர் 150 நாட்களுக்கும் மேலாக கால்ஷீட் கொடுத்து நடித்திருக்கிறார்.
சூரி படப்பிடிப்பு நடைபெற்ற அனைத்து நாட்களிலும் உடன் இருந்தார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு 257 நாட்கள் நடைபெற்றது.
தயாரிப்பாளரிடம் இப்படத்தின் படப்பிடிப்பை இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன் என்று சொன்னேன். ஆனால் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து விட்டது என்று சொல்லவில்லை.
'விடுதலை 2 'படத்திற்கு இசைஞானியின் இசை மிகப்பெரிய பக்கபலமாக இருக்கும். இதில் பணியாற்றிய நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ரசிகர்களுக்கு இந்தத் திரைப்படம் எதிர்பாராத அனுபவத்தை வழங்கும் என நம்புகிறேன் '' என்றார்.
இதனிடையே 'விடுதலை 2' படத்தின் முன்னோட்டத்தில் இடம்பெறும் உரையாடல்கள் அனைத்தும் வலிமையானதாகவும், அரசியல் களத்தில் மற்றும் தளத்தில் அதிர்வை ஏற்படுத்தக் கூடியதாகவும் இடம் பிடித்திருக்கிறது.
அதிலும் குறிப்பாக சிவப்பு சிந்தனை உள்ள கதாபாத்திரமான விஜய் சேதுபதியின் வழியாக.. ''வன்முறை எங்கள் மொழி அல்ல. ஆனால் எங்களுக்கு அந்த மொழியிலும் பேச தெரியும்'' எனும் உரையாடல் பார்வையாளர்களின் கவனத்தை கவர்ந்திருக்கிறது.
மக்களிடத்தில் பிரித்தாளும் அரசியலை மேற்கொள்ளும் ஆளும் வர்க்கத்தினருக்கு எதிராக கம்யூனிஸ்ட் கட்சியினரின் கொள்கை- கோட்பாடு- நடவடிக்கை - ஆகியவை விரிவாகவும், ஆழமாகவும் இடம் பிடித்திருப்பதால்... இந்த திரைப்படம் தற்போதைய இந்திய அரசியல் சூழலில் பெரும் சர்ச்சையை எதிர்கொள்ளக்கூடும் என திரையுலகினர் விவரிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM