இன்றைய திகதியில் எம்மில் பலரும் வாழ்க்கையை சகித்துக் கொண்டு விதி விட்ட வழியில் பயணிக்கிறார்கள். சிலர் தங்களது வாழ்க்கை இப்படித்தான் பயணிக்க வேண்டும் என திட்டமிட்டு.. அதில் தொடர் தோல்விகள் ஏற்பட்டாலும் திட்டமிட்ட பாதையில் தொடர்ந்து பயணிக்கிறார்கள்.
வேறு சிலர் எதை பற்றியும் கவலைப்படாமல் வாழ்க்கை வாழ்வதற்கே என்ற கொள்கையுடன், உழைக்கும் நேரத்தில் உழைத்தும் ... அனுபவிக்க வேண்டிய நேரத்தில் அனுபவித்தும் .. எந்த இலக்கும் வைத்துக் கொள்ளாமல் பயணிக்கிறார்கள். இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையில் பயணிப்பதால் இவர்களால் வாழ்க்கையில் வெற்றியை அடைய முடிவதில்லை.
எம்முடைய முன்னோர்கள் மாற்றம் ஒன்றே மாறாதது என்ற ஒரு விடயத்தை வலியுறுத்தி இருக்கிறார்கள். யாருடைய வாழ்க்கையிலும் ...எந்த தருணத்திலும்... எதன் காரணத்திற்காகவோ மாற்றம் ஏற்படும். இந்த நம்பிக்கையை மட்டும் ஒருபோதும் இழக்காமல் உறுதியாக கடைப்பிடித்தால்... வெற்றி பெறலாம் என அறிவுறுத்துகிறார்கள். இந்த நம்பிக்கையை ஏற்படுத்திக் கொள்வதற்கும் எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் சூட்சமமான ஒரு வழிமுறையை தெரிவித்திருக்கிறார்கள்.
எம்முடைய வீடுகளுக்கு அருகேயும் அல்லது சில ஆலயங்களின் நுழைவு பகுதியிலும் அரச மரமும், வேம்பு மரமும் இணைந்து இருக்கும். இந்த மரத்தின் அடியில் விநாயகப் பெருமானின் உருவ சிலையை பிரதிஷ்டை செய்திருப்பார்கள். அத்துடன் அதன் அருகே இரட்டை நாகங்கள் பின்னி பிணைந்தது போலிருக்கும் சிலையையும் நிறுவி இருப்பார்கள். இத்தகைய இடத்தை தெரிவு செய்து.. முறையாக வழிபட்டால் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும்.
திங்கட்கிழமை அல்லது அமாவாசை தினங்களில் இத்தகைய அரச மரம்- வேம்பு மரம் -விநாயகர் -இரட்டை நாகங்கள் சிலை - ஆகியவை இருக்கும் இடத்திற்குச் சென்று அங்கு சிதறி கிடக்கும் அல்லது அந்த மரத்தில் இருக்கும் அரச இலைகளில் மூன்றினை பறித்து, அதன் முனை வடக்கு திசை நோக்கி இருக்கும் வகையில் வைத்து அதன் மீது மூன்று அகல் விளக்குகளை நல்லெண்ணெய் ஊற்றி தீபமேற்றி வழிபட வேண்டும்.
அத்துடன் இந்த மரத்தை அதிகாலை நேரங்களில் அதாவது சூரிய உதயத்திற்கு முன் 108 முறை வலம் வர வேண்டும். வலம் வரும்போது மனதில் மும்மூர்த்திகளை மனதில் தியானித்து அவர்களுக்குரிய மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே இருக்க வேண்டும். குறிப்பாக அமாவாசை தினத்தன்று இத்தகைய அரச மரத்தை வலம் வரும் பரிகாரத்தை மேற்கொண்டால்... உங்களுடைய வாழ்க்கையில் மாற்றம் நிச்சயம் ஏற்படும்.
நீங்கள் தற்போது எந்த நிலையில் இருக்கிறீர்களோ அதிலிருந்து ஒரு படி மேலே உயர்வீர்கள். வேறு சிலருக்கு திருமண தடை, புத்திர பாக்கிய தடை, காரியத் தடை, தொழில் தடை.. என பல்வேறு சிக்கல்கள் இருக்கக்கூடும். இவை அனைத்திற்கும் விடை அளிக்கக்கூடிய வலிமையான மற்றும் எளிமையான பரிகாரம் இது. இதனை ஒரு முறை மேற்கொண்டால் உங்களுக்குரிய பலன் உறுதியாக கிடைக்கும்.
தொகுப்பு : சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM