நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண வானிலை காரணமாக வடமாகாணமும் பாதிக்கப்பட்டுள்ளதோடு,மன்னார் மாவட்டமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்று புதன்கிழமை (27) காலை பாதுகாப்பு பிரதி அமைச்சர் அநுர ஜெயசேகர தலைமையில் விசேட கலந்துரையாடல் இடம் பெற்றது.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் ஏற்பாடு செய்த குறித்த அவசர கலந்துரையாடல் பாதுகாப்பு பிரதி அமைச்சர் அநுர ஜெயசேகர தலைமையில் இடம்பெற்றது.
இதன் போது வடமாகாண ஆளுநர் என்.வேதநாயகம்,ராணுவ தளபதி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே ,கடற்படை,பொலிஸ் உயர் அதிகாரிகள்,அழைக்கப்பட்ட திணைக்கள தலைவர்கள்,மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு,பிரதேச செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்ற மையினால் மாவட்டத்தில் இதுவரை 14 ஆயிரத்து 237 குடும்பங்களைச் சேர்ந்த 49 ஆயிரத்து 560 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 25 நலன்புரி நிலையங்களில் சுமார் 2100 நபர்கள் வரை தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்தும் மழை பெய்து வருகின்ற மையினால் மன்னார் மாவட்டத்தில் இடம் பெயரும் மக்களின் தொகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
இதன் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு முன்னெடுக்கப்பட வேண்டிய அவசர நடவடிக்கை குறித்து ஆராயப்பட்டது.மேலும் அனர்த்தத்தின் போது மேற்கொள்ள வேண்டிய முன் ஆயத்தம் குறித்தும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் அநுர ஜெயசேகர தலைமையில் ஆராயப்பட்டது.
தொடர்ந்தும் மழை பெய்து கொண்டு இருக்கின்றமையினால் அனுராதபுரம் மற்றும் மல்வத்து ஓயாவில் இருந்தும் கூடுதலான நீர் வந்து கொண்டு இருக்கின்றமையினால் மக்களின் பாதுகாப்பை பலப்படுத்தி முன்னாயத்த நடவடிக்கைகளை முன்னெடுக்க பாதுகாப்பு பிரதி அமைச்சர் அனுர ஜெயசேகர கோரிக்கை விடுத்தார்.
மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.எனவே சகல திணைக்களம் முப்படையினர் இணைந்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பாதுகாப்பு பிரதி அமைச்சர் அனுர ஜெயசேகர வேண்டுகோள் விடுத்தார்.இதன் போது மாவட்டத்தில் ஏற்படுகின்ற அனர்த்தங்களை ஈடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM