(துரைநாயகம் சஞ்சீவன்)
திருகோணமலையில் நிலவும் சீரற்ற வானிலையின் காரணமாக புதன்கிழமை (27) காலை பெறப்பட்ட புள்ளி விபரத்தின் அடிப்படையில் 1708 குடும்பங்களைச் சேர்ந்த 4851 உறுப்பினர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 65 குடும்பங்களைச் சேர்ந்த 182 உறுப்பினர்கள் பாதுகாப்பு மையங்களிலும் 532 குடும்பங்களைச் சேர்ந்த 1621 பேர் உறவினர்கள் வீடுகளிலும் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர் குகதாஸ் சுகுணதாஸ் தெரிவித்துள்ளார்.
திருகோணமலை மாவட்டத்தில் புதன்கிழமை (27) காலை பெறப்பட்ட புள்ளிவிபர தகவலின்படி சேருவில பிரதேச செயலக பிரிவில் 34 குடும்பங்களைச் சேர்ந்த 80 பேரும், மூதூர் பிரதேச செயலக பிரிவில் 938 குடும்பங்களைச் சேர்ந்த 2574 பேரும், தம்பலகாமம் பிரதேச செயலக பிரிவில் 96 குடும்பங்களைச் சேர்ந்த 301 பேரும், மொரவெவ பிரதேச செயலக பிரிவில் 21 குடும்பங்களைச் சேர்ந்த 75 பேரும், பட்டணமும் சூழலும் பிரதேச செயலக பிரிவில் 193 குடும்பங்களைச் சேர்ந்த 673 பேரும், கிண்ணியா பிரதேச செயலக பிரிவில் 403 குடும்பங்களைச் சேர்ந்த 1084 பேரும், குச்சவெளி பிரதேச செயலக பிரிவில் 23 குடும்பங்களைச் சேர்ந்த 64 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 6 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
அத்துடன் சேருவில பிரதேச செயலாளர் பிரிவில் பாதிக்கப்பட்டுள்ள 34 குடும்பங்களைச் சேர்ந்த 80 பேர் சண்பகவல்லி வித்தியாலயத்திலும், தம்பலகாமம் பிரதேச செயலாளர் பிரிவில் பாதிக்கப்பட்டுள்ள 9 குடும்பங்களைச் சேர்ந்த 26 பேர் சித்திவிநாயகர் வித்தியாலயத்திலும், பட்டணமும் சூழலும் பிரதேச செயலக பிரிவில் பாதிக்கப்பட்டுள்ள 22 குடும்பங்களைச் சேர்ந்த 76 பேர் பாரதிபுரம் பாடசாலையிலும் முத்துநகர் கிராம அபிவிருத்திச் சங்க கட்டடத்திலும் தங்க வைக்கப்பட்டு சமைத்த உணவு வழங்கப்பட்டு வருவதாகவும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர் குகதாஸ் சுகுணதாஸ் மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM