பலத்த மழை காரணமாக கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளிலும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மாவட்டத்தின் உள்வீதிகள் பல வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
நீர்கொழும்பு நகரின் பெரியமுல்லை பிரதேசத்தின் ஊடாக ஊடறுத்துச் செல்லும் தெபா எல பெருக்கெடுத்ததன் காரணமாக அங்குள்ள வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
பெரியமுல்லை பிரதேசத்தில் தெனியாயவத்த, ரப்பர் வத்த, கோமஸ்வத்த உட்பட பல பிரதேசங்கள் மற்றும் உள்வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளதன் காரணமாக பாதிக்கப்பட்ட சிலர் உறவினர்கள் நண்பர்களுடைய வீடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
அத்துடன் கட்டுவ புவக்வத்த பிரதேசத்தில் உள்ள பல வீடுகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அங்குள்ள மக்கள் பலர் உறவினர்கள் நண்பர்களுடைய வீடுகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.
இதேவேளை தழுவகொட்டுவ முதலாம் ஒழுங்கையில் அமைந்துள்ள வீடு ஒன்றின் மேல் இன்று நள்ளிரவு 12 மணியளவில் மரம் ஒன்று விழுந்ததன் காரணமாக வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த 29 வயதுடைய நபர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவரது உயிருக்கு ஆபத்து இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இன்று புதன்கிழமை (27) காலை 9:30 மணியளவில் நீர்கொழும்பு பிரதேச செயலாளர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டார். காயமடைந்தவரின் உயிருக்கு ஆபத்து இல்லை என பிரதேச செயலாளர் உறவினர்களிடம் தெரிவித்தார். அத்துடன் விழுந்துள்ள மரத்தை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM