சீரற்ற வானிலை - நுவரெலியாவில் 193 குடும்பங்களைச் சேர்ந்த 691 பேர் பாதிப்பு

Published By: Digital Desk 7

27 Nov, 2024 | 01:18 PM
image

நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நேற்று செவ்வாய்க்கிழமை (26) பிற்பகல் வரை 193 குடும்பங்களைச் சேர்ந்த 691 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபட தெரிவித்துள்ளார்.

சீரற்ற காலநிலை காரணமாக 98 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் 50 குடும்பங்களைச் சேர்ந்த 207 பேர் 3 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

காயமடைந்தவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் மேலும் தெரிவித்தார்.

மேலும், நேற்று வெள்ளம் காரணமாக தடைப்பட்ட கந்தபளை வீதியினூடாக பரீட்சைக்கு சென்ற மாணவர்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்கும் நடிவடிக்கையில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் உட்பட அதிகாரிகள் செயற்பட்டு வருவதாக மாவட்ட செயலாளர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வரவு - செலவு திட்டத்தால் மக்கள்...

2025-03-22 16:33:50
news-image

காஸா விவகாரத்தில் அரசாங்கத்தின் வெளியிட்டது கண்டன...

2025-03-22 22:04:04
news-image

நாட்டுக்கு ஆபத்தென்றால் ரணில் உதவுவார் -...

2025-03-22 16:32:49
news-image

கிளிநொச்சியில் வீடொன்றிலிருந்து கேரோயின் மற்றும் ஐஸ்...

2025-03-22 21:02:50
news-image

அரச சேவைகளில் அமைச்சர்களின் குடும்ப அங்கத்தவர்களுக்கு...

2025-03-22 16:30:53
news-image

இலங்கையை பொறுப்புக்கூறச் செய்வதற்கு உயர் வழிமுறைகளை...

2025-03-22 19:39:55
news-image

காசாவில் நிலைமை மோசம் - இலங்கை...

2025-03-22 16:31:19
news-image

பலஸ்தீனர்களுக்கு எதிரான அநீதிகளுக்கு அரசு கண்டனம்...

2025-03-22 15:28:51
news-image

வவுனியா சிறைச்சாலையிலிருந்து கைதி ஒருவர் தப்பியோட்டம்

2025-03-22 17:27:21
news-image

கொழும்பு - கண்டி வீதியில் இரு...

2025-03-22 16:51:04
news-image

உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஈ.பி.டி.பியின் வெற்றிக்கான...

2025-03-22 16:43:17
news-image

தெவிநுவர துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் “பாலே...

2025-03-22 16:20:17