சுற்றுலாப்பயணிகளுடன் சென்ற பஸ் பள்ளத்தில் சரிந்து விபத்து ஏற்பட்டதில் 23 பேர் பலியானதோடு, 11 பேர் காயமடைந்துள்ளனர். 

துருக்கியிலுள்ள சுற்றுலாத்தளமான மர்மாரிஸ் மலைப்பிரதேசத்தில் நேற்று சுற்றுலாப் பயணிகளுடன் பயணித்த பஸ் திடீரென சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த வீதியின் ஓரத்திலிருந்த தடுப்பை உடைத்துக் கொண்டு பள்ளத்தில் கவிழ்ந்தது. 

இந்த விபத்தில் 23 பேர் சம்பவயிடத்திலேயே பலியாகினர். மேலும், விபத்து குறித்து தகவலறிந்து சம்பவயிடத்துக்கு வந்த மீட்புக் குழுவினர் விபத்தில் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். 

பஸ்ஸின் பிரேக் பகுதியில் ஏற்பட்ட திடீர் கோளாறுதான் விபத்திற்கான முதன்மை காரணமாக இருக்கும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.