(நெவில் அன்தனி)
அன்டிகுவா, நோர்த் சவுண்ட் விவியன் றிச்சட்ஸ் விளையாட்டரங்கில் நடைபெற்ற பங்களாதேஷுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 201 ஓட்டங்களால் மேற்கிந்தியத் தீவுகள் மிக இலகுவாக வெற்றிபெற்றது.
கடந்த இரண்டரை வருடங்களில் மேற்கிந்தியத் தீவுகள் தனது சொந்த மண்ணில் ஈட்டிய முதலாவது டெஸ்ட் வெற்றி இதுவாகும்.
இந்த வெற்றியில் ஜஸ்டின் கிறீவ்ஸ் குவித்த கன்னிச் சதம், மிக்கைல் லூயிஸ், அலிக் அத்தானேஸ் ஆகியோர் குவித்த அரைச் சதங்கள், அல்ஸாரி ஜோசப், கெமர் ரோச், ஜேடன் சீல்ஸ் ஆகியோர் பதிவு செய்த 3 விக்கெட் குவியல்கள் என்பன மேற்கிந்தியத் தீவுகளை வெற்றிபெறச் செய்தன.
இநி;தப் போட்டியில் தஸ்கின் அஹ்மத் 6 விக்கெட் குவியலைப் பதிவு செய்தபோதிலும் அது கடைசியில் வீண்போனது.
334 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் சகல விக்கெட்களையும் இழந்து 132 ஓட்டங்ளைப் பெற்று தோல்வி அடைந்தது.
கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமான இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட மேற்கிந்தியத் தீவுகள் 9 விக்கெட்களை இழந்து 450 ஓட்டங்களைக் குவித்திருந்தபோது தனது முதல் இன்னிங்ஸை 2ஆம் நாளன்று நிறுத்திக்கொண்டது.
அன்றைய தினம் தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த பங்களாதேஷ் 3ஆம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தபோது 9 விக்கெட் இழந்த 269 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
மறுநாள் காலை ஆட்டம் தொடர்வதற்கு முன்னர் தனது இன்னிங்ஸை நிறுத்திக்கொள்ள பங்களாதேஷ் தீர்மானித்தது.
நான்காம் நாள் காலை தனது 2ஆவது இன்னிங்ஸை ஆரம்பித்த மேற்கிந்தியத் தீவுகள் 152 ஓட்டங்களுக்கு சுருண்டது.
எண்ணிக்கை சுருக்கம்
மேற்கிந்தியத் தீவுகள் 1ஆவது இன்: 450 - 9 விக். டிக்ளயார்ட் (ஜஸ்டின் கிறீவ்ஸ் 115 ஆ.இ., மிக்கைல் லூயிஸ் 97, அலிக் அத்தானேஸ் 90, கெமர் ரோச் 47, ஹசன் மஹ்முத் 87 - 3 விக்)
பங்களாதேஷ் 1ஆவது இன்: 269 - 9 விக். டிக்ளயார்ட் (ஜேக்கர் அலி 53, மொமினுள் ஹக் 50, லிட்டன் தாஸ் 40, அல்ஸாரி ஜோசப் 69 - 3 விக்.)
மேற்கிந்தியத் தீவுகள் 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 152 (அலிக் அத்தானேஸ் 42, க்ரெய்க் ப்ரெத்வெய்ட் 23, தஸ்கின் அஹ்மத் 64 - 6 விக்., மெஹ்தி ஹசன் மிராஸ் 31 - 2 விக்.)
பங்களாதேஷ் - வெற்றி இலக்கு 334 ஓட்டங்கள் - 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 132 (மெஹ்தி ஹசன் மிராஸ் 45, ஜேக்கர் அலி 31, லிட்டன் தாஸ் 22, கெமர் ரோச் 20 - 3 விக்., ஜேடன் சீல்ஸ் 45 - 3 விக்., அல்ஸாரி ஜோசப் 32 - 2 விக்.)
ஆட்டநாயகன்: ஜஸ்டின் கிறீவ்ஸ்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM