மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை காரணமாக 48 ஆயிரத்து 295 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் 2049 நபர்கள் 22 பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தெரிவித்தார்.
மன்னார் மாவட்டச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (26) மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மன்னார் மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களுக்கு மேலாக பெய்து வரும் கடும் மழை காரணமாகவும் தற்போது வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த நிலைமை காரணமாக மேலும் வலுவடைந்துள்ளது.
தற்போதைய நிலைமையின் படி மன்னார் மாவட்டத்தில் 13 ஆயிரத்து 860 குடும்பங்களைச் சேர்ந்த 48 ஆயிரத்து 295 நபர்கள் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகரம்,மடு,மாந்தை மேற்கு, நானாட்டான் ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் வெள்ள நிலைமை காரணமாக பொது மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அந்த வகையில் மாவட்டத்தில் அமைக்கப்பட்ட 22 பாதுகாப்பு மையங்களில் 589 குடும்பங்களைச் சேர்ந்த 2049 நபர்கள் தங்க வைக்கப்பட்டு,அவர்களுக்கு சமைத்த உணவுகளை வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
தற்போது ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழமுக்கம் காரணமாக மன்னார் மாவட்டத்தில் அதிக அளவில் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இதனால் ஏற்படவுள்ள அனர்த்தத்தை தடுக்க முப்படையினர், அதிகாரிகள் இணைந்து நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
தற்போது நீடித்துள்ள மழை காரணமாக உயர் தர பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு எவ்வித தடங்கலும் இன்றி பரீட்சை எழுதுவதற்கு அவர்கள் பாதுகாப்பாக பரீட்சை நிலையங்களுக்கு சென்று வருவதற்கு ஏற்பாடுகளும்,முப்படையினரின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
வெள்ள நிலமை தொடர்பான மதிப்பீடுகளை மேற்கொள்வதற்காக பிரதி பாதுகாப்பு அமைச்சர் அனுர ஜெயசேகர இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டு மன்னாருக்கு வருகை தந்து நேரடியாக வெள்ள நிலையை பார்வையிட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளார்.திணைக்கள தலைவர்களுடனும் சந்திப்பை மேற்கொள்ள உள்ளார்.
மேலும் நாளைய தினம் (27) வெள்ள நிலையை மதிப்பிட வடமாகாண ஆளுநர் மன்னாரிற்கு வருகை தர உள்ளார். தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக மன்னார் மாவட்டத்தில் கால போகத்திற்கு இதுவரை பயிர்ச்செய்கை முன்னெடுக்கப்பட்ட 9 ஆயிரத்து 779 ஏக்கர் ஹெக்டேர் நிலப்பரப்பில் 5 ஆயிரத்து 888 ஏக்கர் ஹெக்டேர் நிலப்பரப்பில் முன்னெடுக்கப்பட்ட நெற் பயிர்ச்செய்கை முற்றாக அழிவடைந்துள்ளன.
தற்போது மன்னார் மாவட்டத்தில் முக்கியமான குளமான கட்டுக்கரை குளத்தின் நீர் மட்டமும் நிரம்பும் நிலையில் உள்ளது.தற்போது 11 அடி உயரத்தில் நீர் காணப்படுகின்றது.11.5 அடி உயரத்திற்கு நீர் உயரும் பட்சத்தில் நீர் வெளியேறி மாவட்டத்தில் மேலும் வெள்ள நிலை ஏற்படும்.
எனினும் மன்னார் மாவட்டத்தில் வெள்ள நிலையை கட்டுப்படுத்தி மக்களுக்கு ஏற்படும் பாதிப்பை குறைக்கும் வகையில், வெள்ளத்தை வெளியேற்றும் நடவடிக்கையும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமைத்த உணவு போன்ற நடவடிக்கைகளும் உரிய திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. என அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM