இன்றைய சூழலில் பாடசாலைக்கு சென்று வகுப்பறையில் பயிலும் மாணவர்களும், மாணவிகளும் கல்வியில் கவனம் செலுத்துவது என்பது சவாலானது. ஏனெனில் அவர்களுக்கு கவன சிதறலை ஏற்படுத்தும் அளவிற்கு சமூக வலைதளங்களின் ஆதிக்கம் இன்று பரந்த அளவில் ஊடுருவி இருக்கிறது.
இதனால் எம்முடைய பிள்ளைகள் 'ஓ' லெவல் - 'ஏ' லெவல் போன்ற கல்விகளை கற்கும் போது அதிக பெறுபேறுகளை பெற வேண்டும் என பெற்றோர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் எம்முடைய பிள்ளைகள் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால் கைபேசியை தங்களது ஆறாவது விரலாக கருதி தங்களுடன் 24 மணி நேரம் வைத்துக் கொண்டிருப்பதால் படிப்பதில் கவனம் செலுத்துவதில்லை. செல்போன்களின் ஆதிக்கத்தால் தற்போது இளைய தலைமுற இணைய தலைமுறையினராக மாற்றம் பெற்றதுடன், வாசிப்பு அனுபவமும் குறைந்துவிட்டது.
இந்நிலையில் ஒவ்வொரு பெற்றோர்களும் தங்களது பிள்ளைகள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். அவர்கள் உயர்கல்வி கற்க வேண்டும். அதில் தேர்ச்சி பெற்று தங்களது வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும் என விரும்புகிறார்கள். இதற்கு நேர் எதிராக பிள்ளைகளின் செயல்பாடுகள் இருக்கிறது. இந்தத் தருணத்தில் எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் உங்களுடைய பிள்ளைகள் கல்வியில் கவனம் செலுத்துவதற்கு தேவையான சில சூட்சுமமான குறிப்புகளை வழங்கியிருக்கிறார்கள். அவற்றினை தொடர்ந்து கீழே காண்போம்.
உங்களது வீடுகளில் அல்லது வீட்டின் வாசலில் வாரத்தில் ஏதேனும் ஒரு கிழமையை தெரிவு செய்து கொண்டு மாவிலை தோரணத்திற்கு பதிலாக அரச இலையை பறித்துக்கொண்டு அதாவது நீங்கள் எந்த கிழமையில் வாசலில் தோரணமாக கட்ட திட்டமிட்டிருக்கிறீர்களோ..! அதற்கு முதல் நாள் மாலை சூரிய அஸ்தமனத்திற்கு முன்பாக அரச மரத்திலிருந்து அரச இலையை பறித்து அதனை வீட்டிற்கு எடுத்து வந்து சுத்தப்படுத்தி அதில் மஞ்சளால் ஓம் என்ற மந்திரத்தை எழுதி கயிறால் கட்டிக் கொள்ள வேண்டும்.
அதனை மறுநாள் காலையில் தோரணமாக வாசலில் கட்டுங்கள். இந்த அரச இலை தோரணம் உங்களுடைய வீட்டிற்குள் எந்த ஒரு துர் சக்தியையும் அனுப்பாது. அத்துடன் வீட்டில் இருக்கும் துஷ்ட சக்திகளையும் விரட்டும். இதனால் உங்களது பிள்ளைகள் பாடசாலையில் இருந்து திரும்பியவுடன் படிக்க வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்குள் உண்டாகும்.
அதே தருணத்தில் உங்களுடைய பிள்ளைகள் பாடசாலைக்கு எடுத்துச் செல்லும் புத்தகங்களிலோ அல்லது அதற்கான பிரத்யேக உறைகளிலோ அல்லது போத்தல்களிலோ முப்பத்தி இரண்டு என்ற எண்ணை பச்சை வண்ண மைக் கொண்டு எழுதுங்கள். இந்த எண் நல்லதொரு அதிர்வை உங்கள் பிள்ளைகளுக்குள் ஏற்படுத்தி கல்வி மீது கவனத்தை செலுத்த வைக்கும்.
காலையில் எழுந்ததும் அதாவது பிரம்ம முகூர்த்தத்தில் உங்களது பிள்ளைகளை எழுப்பி புத்தகங்களை வாசிக்குமாறு கேட்டுக் கொள்ளுங்கள். வாரத்தில் ஒரு நாளாவது இதற்கு முயற்சி செய்யுங்கள். அந்தத் தருணத்தில் இணையத்தில் 'சகலகலாவல்லி மாலை' எனும் பக்தி பாடல் உள்ளது. அதனை உங்களது வீடுகளிலும், உங்களது பிள்ளைகளின் காதுகளில் அதன் ஒலி சென்றடையும் வகையிலும் ஒலிக்கச் செய்யுங்கள்.
இந்த பாடலில் உள்ள சொற்கள் சூட்சமமான வலிமை வாய்ந்தவை. கல்வி கடவுளான சரஸ்வதி தேவியை போற்றும் துதிகள் என்பதால் இவற்றை உங்களுடைய பிள்ளைகள் கேட்கும்போது கவன சிதறலில் இருந்து விலகி , ஒருமுகமான மனதுடன் கல்வியை கற்பர்.
இதனைத் தொடர்ந்து அவர்கள் விரும்பி சாப்பிடும் உணவு பட்டியலில் கெட்டித் தயிரையும், சர்க்கரையையும் சேர்த்து விடுங்கள். கெட்டித் தயிரும் சர்க்கரையும் சேர்ந்து அவர்கள் பசியாறும் போது.. இந்த உணவு உள்ளுக்குள் சென்று ஆரோக்கியமான அதிர்வை ஏற்படுத்தி கல்வியில் கவனத்தை செலுத்த வைக்கும்.
மேலே சொல்லப்பட்ட சின்ன சின்ன எளிய வழிமுறைகளை பெற்றோர்கள் தொடர்ந்து மேற்கொள்ளும் போது அவர்களுடைய பிள்ளைகள் கவன சிதறலில் இருந்து விலகி, கல்வி மீது கவனம் செலுத்தி அதில் தேர்ச்சி பெற்று வெற்றி பெறுவர்.
தொகுப்பு : சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM