இனவாத பிரச்சினைகள் நாட்டில் தலைதூக்குவதாக தெரிவிக்கப்படுவதில் எந்த உண்மையும் இல்லை - சபாநாயகர் அசோக்க ரன்வல

Published By: Vishnu

26 Nov, 2024 | 06:16 PM
image

(எம்,ஆர்.எம்.வசீம்)

நாட்டில் இனவாத பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்குவதாக ஊடகங்கள் வெளியிட்டாலும் அவ்வாறான எந்த விடயமும் நடைமுறையில் இடம்பெற்றதாக தகவல் இல்லை. அவ்வாறான சம்பவம் உண்மையாக இடம்பெறுமாக இருந்தால் அதனை இல்லாமல் செய்வதற்கு பாராளுமன்றம் நடவடிக்கை எடுக்கும் என சபாநாயகர் அசோக்க ரன்வல தெரிவித்தார்.

சபாநாயகர் செவ்வாய்க்கிழமை (26) அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையை சந்தித்து கலந்துரையாடிய பின்னர் ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டில் இனவாத பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்குவதாக ஊடகங்கள் வெளியிட்டாலும் அவ்வாறான எந்த விடயமும் நிஜத்தில் காணக்கூடியதாக இல்லை. உண்மையாக அவ்வாறான சம்பவம் இடம்பெறுமாக இருந்தால் பாராளுமன்றத்தில் அது தொடர்பில் கலந்துரையாடி, அதனை இல்லாமல் செய்வதற்கு நடவடிக்கை எடுப்போம்.

அதேபோன்று வடக்கில் மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்படுவது தொடர்பில் எந்த கருத்தாடலும் நாட்டுக்குள் இருப்பதாக தெரியவில்லை. சாதாரணமாக இடம்பெறும் நிகழ்வே இடம்பெறுவதாக எமக்கு தகவல் கிடைத்திருக்கிறது. கடந்த காலங்களில் மேற்கொண்டது போன்று மீண்டும் செயற்படுவார்கள் என நாங்கள் நினைக்கவில்லை. வடக்கு மக்கள் தொடர்பில் எங்களுக்கு உண்மையான நம்பிக்கை இருக்கிறது. அவர்களின் எதிர்பார்ப்பாக இருப்பது, தங்களின் பிள்ளைகளின் எதிர்காலத்துக்காக இந்த நாட்டை மீள கட்டியெழுப்புவதாகும்.

அத்துடன் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், பாராளுமன்றத்தில் முதல்நாள் அமர்வின்போது செயற்பட்ட விதம் தொடர்பில், அவர் தனது கவலையை தெரிவித்திருந்தார். அவர் ஒரு புதிய உறுப்பினர் என்றவகையில், தவறுதலாகவே எதிர்க்கட்சித் தலைவரின் ஆசனத்தில் அமர்ந்ததாகவும் வேண்டுமென்று அவ்வாறு செயற்பட வில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 அதேநேரம் இந்த சம்பவம் தொர்பில் எதிர்க்கட்சித் தலைவரும் மிகவும் முன்மாதிரியாக நடந்துகொண்டு, அவரின் பெருந்தன்மையை வெளிப்படுத்தி இருந்தார், இதனையே நாங்கள் பாராளுமன்றத்தில் எதிர்பார்க்கிறோம். அதனால் இந்த சிறிய விடயத்தை பெரிதாக்கி, இதனை நாட்டின் பிரதான பிரச்சினையாக்க நாங்கள் முற்படக்கூடாது. அர்ச்சுனா எம்.பி தன்னால் ஏற்பட்ட தவறை உணர்ந்து, அதற்காக பகிரங்கமாக தனது கலையை வெளிப்படுத்தியதையிட்டு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஐ.தே.க.வுடனான பேச்சுவார்த்தை தொடர்பில் சஜித் நேர்மறையான...

2025-02-14 01:57:12
news-image

உள்ளுராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் ஐக்கிய மக்கள்...

2025-02-14 01:53:03
news-image

இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிடும் ஜூலி...

2025-02-14 01:48:10
news-image

மஹிந்தவின் உத்தியோகபூர்வ இல்லத்தின் பாதுகாப்பு உத்தியோகஸ்த்தர்கள்...

2025-02-14 01:40:11
news-image

வெளிப்படைத்தன்மையுடன் அனைவருக்கும் சமமான வரி கொள்கை...

2025-02-14 01:26:50
news-image

எல்ல மலைத்தொடரில் ஏற்பட்ட தீ; மலைத்தொடர்...

2025-02-14 00:34:25
news-image

யு.எஸ்.எய்ட் நிறுவனத்தில் நிதி பெற்றதாக குற்றச்சாட்டு...

2025-02-13 17:39:13
news-image

சட்ட மா அதிபரை பதவி நீக்குவதற்கான...

2025-02-13 14:05:04
news-image

காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தின் பின்னணியில் யார்?...

2025-02-13 15:25:56
news-image

இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா,...

2025-02-13 21:48:10
news-image

வட மாகாண ஆளுநருக்கும் இலங்கை ஆசிரியர்...

2025-02-13 21:37:21
news-image

 ஜனாதிபதி மற்றும் வியட்நாம் பிரதிப் பிரதமர்...

2025-02-13 21:32:28