ரேடியல் நரம்பு வாத பாதிப்பிற்குரிய நவீன மின்னதிர்வு சிகிச்சை

Published By: Digital Desk 7

26 Nov, 2024 | 06:17 PM
image

இன்றைய இளைய தலைமுறையினர் தங்களது வாழ்க்கை நடைமுறையையும், உணவு முறையையும் மாற்றி அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும் பணி சுமை என்று கூறி வார இறுதி நாட்களில் பிரத்யேகமான இடங்களுக்குச் சென்று அங்கு நடைபெறும் விருந்துக்களில் பங்குபற்றுகிறார்கள்.

அத்துடன் அங்கு பரிமாறப்படும் மது உள்ளிட்ட போதை வஸ்துகளையும் பாவிக்கிறார்கள். இதன் காரணமாக அவர்களுடைய வலதுகை அல்லது இடது கை ஏதேனும் ஒரு பகுதியில் திடீரென்று மரத்து விடுகிறது. அங்கு இயல்பாக நடைபெற வேண்டிய இயக்கம் நடைபெறாமல் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இதனை மருத்துவ மொழியில் ரேடியல் நர்வ் பாலிசி  அதாவது ரேடியல் நரம்பு வாத பாதிப்பு என குறிப்பிடுகிறார்கள். இதனை தொடக்க நிலையில் கண்டறிந்தால் நவீன மின்னதிர்வு சிகிச்சை மூலம் நிவாரணம் அளிக்கலாம் என வைத்தியர்கள் தெரிவிக்கிறார்கள்.

எம்மில் சிலருக்கு இரவில் உறங்கி காலையில் படுக்கையில் இருந்து எழும்போது வலது கை அல்லது இடது கையில் உள்ள மூட்டுகள்- மணிக்கட்டு -விரல்கள்- போன்றவற்றை அசைக்க இயலாத ஒரு நிலை உண்டாகும். மேலும் இவை உணர்வின்மையால் பாதிக்கப்பட்டிருக்கும்.

எம்முடைய கழுத்துப் பகுதியில் இருந்து கையின் மேல் பகுதி மணிக்கட்டு விரல்கள் வரை நரம்புகள் செல்கிறது. இந்த நரம்புகள் கை மற்றும் கைகளில் உள்ள உறுப்புகளில் இயக்கத்தை கட்டுப்படுத்துகிறது. சிலருக்கு எதிர்பாராத விதமாக கைகளில் காயங்கள் ஏற்படுவதன் காரணமாகவோ அல்லது மேல் கையில் உள்ள நரம்புகள் பலவீனம் அடைவதாலோ அல்லது சேதம் ஏற்படுவதாலோ இத்தகைய பாதிப்பினை ஏற்படுத்துகிறது.

சிலருக்கு விரல்கள் - மணிக்கட்டுகள் ஆகியவற்றில் உணர்வின்மை ஏற்படும். வேறு சிலருக்கு மணிக்கட்டு அல்லது விரல்களை நீட்டி சுருக்கி இயக்குவதில் சிக்கல்கள் ஏற்படும். வேறு சிலருக்கு கைகளையோ அல்லது விரல்களையோ இயக்க முடியாமல் அவதிப்படுவர். இத்தகைய அறிகுறிகள் ஏற்பட்டால் அவர்கள் உடனடியாக அருகில் இருக்கும் வைத்தியசாலைக்குச் சென்று நரம்பியல் சிகிச்சை நிபுணரை சந்தித்து ஆலோசனையும், சிகிச்சையும் பெற வேண்டும்.

பொதுவாக இத்தகைய பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு நரம்பியல் அமைப்பில் எந்த பாதிப்பு ஏற்படவில்லை என்றால்.. மூன்று வாரங்களில் இருந்து மூன்று மாத காலத்திற்குள் அவை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி விட கூடும். இந்தத் தருணத்தில் வைத்தியர் பரிந்துரைக்கும் ஓய்வு - இயன் முறை பயிற்சி - மருந்தியல் சிகிச்சை-  ஆகியவற்றை தொடர்ச்சியாகவும் முறையாகவும் மேற்கொண்டால் நிவாரணம் முழுமையாக கிடைக்கும்.

சிலருக்கு இத்தகைய பாதிப்பின் காரணமாக திகழும் நரம்புகளில் சேதம் ஏற்பட்டு சிதைந்திருந்தால்... அதனை சீராக்க சத்திர சிகிச்சையால் தான் இயலும்.  சிலருக்கு Axonotmesis எனும் பாதிப்பு ஏற்பட்டிருந்தால்.. அவர்களுக்கு சத்திர சிகிச்சை மூலம்தான் நிவாரணம் தர இயலும். மேலும் இத்தகைய பாதிப்பிற்கு ஆளான நோயாளிகளுக்கு பிரத்யேக மருந்தியல் சிகிச்சை, இயன்முறை சிகிச்சை ஆகியவற்றை வழங்கி நிவாரணம் தருவர். சிலருக்கு அவர்களுடைய கை -மணிக்கட்டு- விரல்கள் - ஆகியவற்றின் இயக்கம் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக பிரத்யேக உறையை அணிந்து கொள்ள பரிந்துரைப்பார்கள். இந்த தருணத்தில் வைத்தியர்கள் தொடர்ந்து இயன்முறை சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துவார்கள்.

இத்தகைய இயன்முறை சிகிச்சையை தொடர்ந்து மேற்கொள்ளும் போது தான் உங்களுடைய கைகளில் இயக்கம் சீரடையும் மேலும் பலவீனமான நரம்புகள் புத்தாக்கம் பெற்று சீராக இயங்கத் தொடங்கும். இந்த தருணங்களில் நிவாரணம் திருப்தியாக கிடைக்கவில்லை என்றால்... அவர்களுக்கு வைத்தியர்கள் பிரத்யேக மின்னதிர்வு சிகிச்சை முறையை பரிந்துரைக்கிறார்கள். இந்தத் தருணத்தில் நரம்புகள் இயல்பான தூண்டலை பெறுவதற்காக நரம்புகளில் குறிப்பிட்ட இடத்தில் மின்னதிர்வை வழங்குவார்கள். இதன்பிறகு பாதிப்பு குறைந்து நிவாரணம் கிடைக்கும்.

வைத்தியர் வெங்கடேஷ்

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தற்காலிக சிறுநீரக பாதிப்புக்கு நிவாரணமளிக்கும் நவீன...

2024-12-04 17:39:54
news-image

சினைப்பை நீர்க்கட்டி பாதிப்பை சீரமைக்கும் நவீன...

2024-12-03 16:32:15
news-image

தைரொய்ட் கட்டி பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும்...

2024-12-02 17:14:34
news-image

கிளியோபிளாஸ்டோமா மல்டிஃபார்ம் எனும் புற்றுநோய் பாதிப்பிற்கு...

2024-11-29 17:49:15
news-image

தோலில் ஏற்படும் பாதிப்புகளுக்கு நிவாரணம் அளிக்கும்...

2024-11-28 18:26:24
news-image

முழங்கால் மூட்டு காயத்தை விரைவாக நிவாரணம்...

2024-11-27 15:58:05
news-image

ரேடியல் நரம்பு வாத பாதிப்பிற்குரிய நவீன...

2024-11-26 18:17:04
news-image

ஹீமோடயாபில்ட்ரேசன் - சிறுநீரக நோயாளிகளுக்கான நவீன...

2024-11-25 19:16:34
news-image

புற்றுநோய் பாதிப்புக்கு நிவாரணம் அளிக்கும் நவீன...

2024-11-20 18:30:48
news-image

பக்கவாத பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும் நவீன...

2024-11-18 16:30:21
news-image

குருதி புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும்...

2024-11-16 16:34:33
news-image

நீரிழிவு நோயால் பாதம் பாதிக்கப்பட்டிருக்கிறதா? என்பதை...

2024-11-15 16:10:38